/tamil-ie/media/media_files/uploads/2019/07/D-tzkcNXYAEG8M9.jpg)
Samsung Galaxy S11 Plus or Galaxy S20 Ultra? New leak hints at latter
Samsung Galaxy Note 10 renders leaked : இந்த வருடம் சாம்சங் வெளியிட இருக்கும் மிக முக்கியமான ப்ரிமியம் ஸ்மார்ட்போன் இந்த கேலக்ஸி நோட் 10 ஆகும். வருகின்ற ஆகஸ்ட் 7ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், கேலக்ஸி நோட் 10 - ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் நிறங்கள் குறித்த செய்திகள் லீக்காகியுள்ளது.
Samsung Galaxy Note 10 renders leaked
@Ishanagarwal24 என்ற ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்ட பதிவின் படி இந்த ஸ்மார்ட்போன் க்ளாசிக் ப்ளாக் மற்றும் இரட்டை நிறகலவையில் சில்வர் ஃபினிஷ் நிறங்களில் வெளியாக உள்ளது. இந்த புகைப்படங்களை சற்றே உற்று கவனித்தால் இதற்கு முன்பு வெளியான கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனுக்கும் இதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்று தான் கூற இயலும்.
AND HERE IT IS! Your first look at the Samsung Galaxy Note10 Silver and Black colour option images! Isn't the gradient just amazing? I'm so loving the design, what about you? *Please credit if you use, not using watermarks.* #Samsung#GalaxyNote10#GalaxyNote10#Unpackedpic.twitter.com/emW36lApaw
— Ishan Agarwal (@ishanagarwal24) 10 July 2019
நியூயார்க் நகரில் இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாக உள்ளது. இதனுடன் சாம்சங்க் கேலக்ஸி நோட் 10 ப்ளஸ் ஸ்மார்ட்போனும் வெளியாகிறது. சாம்சங் இந்தோனேசியா ட்விட்டர் சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : கேலக்ஸி நோட் 10 அறிமுக விழா : அசத்தலான டீசர் மூலம் அழைப்பு விடுத்த சாம்சங் நிறுவனம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.