Advertisment

ஸ்டைலஸ் பேனாவை மீண்டும் அறிமுகப்படுத்திய சாம்சங் கேலக்ஸி நோட் 9

512GB மெமரி கார்டுடன் வருகிறதா சாம்சங் கேலக்ஸி நோட் 9 ?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samsung Galaxy Note 9

Samsung Galaxy Note 9

நியூயார்க்கிலிருந்து நந்தகோபாலன் ராஜன்

Advertisment

Samsung Galaxy Note 9 Features: நியூயார்க் நகரில் நேற்று சாம்சங் கேலக்ஸி மாடலில் புதிய போனை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது சாம்சங் நிறுவனம்.

சாம்சங் S8ற்கு பின் சாம்சங் அறிமுகப்படுத்தும் ஹையர் எண்ட் ஸ்மார்ட்போன் இதுவாகும். அதனால் கேலக்ஸி நோட் 9ன் மீதான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக இருந்தன.

இந்த போனின் மிகப்பெரிய பலம் என்பது கேலக்ஸி நோட் 9 உடன் வரும் ஸ்டைலஸ் தான். S பேனா என்று அழைக்கப்படும் இந்த ஸ்டைலஸ் கேலக்ஸியை உபயோகப்படுத்தும் முறையையே மாற்றக்கூடிய திறன் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மாற்றுக் கருத்தே இல்லை.

Samsaung Galaxy Note 9, Stylus of the Samsaung Galaxy Note 9 Samsaung Galaxy Note 9 Mobile with its stylus

இந்த போனினை அறிமுகப்படுத்தி பேசிய சாம்சங் நிறுவனத் தலைவர் டி.ஜி.கோஹ் “ இது வெறும் திறன்பேசிகள் மட்டும் அல்ல. இது மனிதர்களின் நுண்ணறிவுக்கு ஈடு தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 - ன் சிறப்பம்சங்கள் ( Samsung Galaxy Note 9 specifications)

பார்ப்பதற்கு மிகவும் இலகுவானதாக இருக்கும் இந்த போனின் வெளிப்புறத் தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்த்திருப்பது டைமண்ட் எட்ஜ் கட்டிங் ஆகும்.

S- ஸ்டைலஸ்ஸுடன் வரும் இந்த கேலக்ஸி நோட் 9ன் பின்பக்கத்தில் இரட்டைக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.  ஒரு வைட் கேமரா ஒரு டெலிபோட்டோ கேமரா என இரட்டைக் கேமராக்களுடன் வலம் வர இருக்கிறது இந்த போன். இரண்டு கேமராக்களின் திறனும் 12MP ஆகும்.

இதனுடைய பேட்டரித் திறன்  4000 mAh

அதிவேக இண்டெர்நெட் வசதிகளை பெறும் அளவிற்கு இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 9 ( Samsung Galaxy Note 9 வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 1.2Gbps என்ற வேகத்தில் உங்களால்  டேட்டாக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 - ன் நிறங்கள்

205 கிராம் எடையுள்ள இந்த போன் நான்கு வித்தியாசமான நிறங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க இருக்கிறது.

மிட்நைட் ப்ளாக் (midnight black), மெட்டாலிக் காப்பர் ( metallic copper), ஓசன் ப்ளூ (ocean blue), மற்றும் லாவண்டர் பர்ப்பிள் (Lavender Purple) நிறங்களில் வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் கிடைக்கும்.

Samsaung Galaxy Note 9, colors of Samsaung Galaxy Note 9 Samsaung Galaxy Note 9 mobile

சாம்சங் கேலக்ஸி நோட் 9 -ன் உள்கட்டமைப்பு தொழில் நுட்பங்கள்

சாம்சங் எக்ஸினோஸ் சிப் செட்டில் ( Samsung’s Exynos chipset) பொருத்தப்பட்டிருக்கும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 (Qualcomm Snapdragon 845) இந்த போனை இயக்கிக் கொண்டிருக்கிறது.

கூலிங் சிஸ்டம்

இந்த போனில் நீங்கள் உங்கள் விருப்பப்படி நிறைய நேரம் விளையாடலாம். இந்த போனில் இணைக்கப்பட்டிருக்கும் கார்பன் பைபர் சிஸ்டம் போனை அனைத்து நேரத்திலும் வெப்பமடையாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்தியாவில் வெளி வர இருக்கும் இந்த போனின் வேரியேசனில் இரண்டு சிம்கார்டுகளை பயன்படுத்த இயலும்.

Samsung Galaxy Note 9 Samsung Galaxy Note 9 with its stylus

சாம்சங் கேலக்ஸி நோட் 9 சேமிப்புத் திறன்

இரண்டு வேறுபட்ட சேமிப்புத் திறனுடன் வருகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 9. 128GB இண்டர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய 6GB RAM போனின் விலை 999 அமெரிக்க டாலர்களாகும். 512GB இண்டர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய 8GB RAM போனின் விலை சுமார் 1249 டாலர்களாகும்.

512ஜிபி உடன் கூடிய மெமரி கார்டினையும் தயாரித்து இந்த போனுடன் தர இருக்கிறது சாம்சங் நிறுவனம்.

இந்தியாவில் இந்த போனின் விலையை மிக விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி உலகம் முழுவதும் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 9ன் விலை என்ன? ( Samsung Galaxy Note 9 India Price )

இந்தியாவில் இந்த போனின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது சாம்சங் நிறுவனம். சேமிப்புத் திறனை அடிப்படையாகக் கொண்டு அதன் விலை சுமார் ரூபாய் 67,900 யில் இருந்து சுமார் ரூபாய் 84,900 வரை இரண்டு போன்களின் விலை இருக்கலாம் என்று அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். இந்த போனின் விலை குறித்து இதர தகவல்களை ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment