16 ஜிபி மெமரியுடன் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் கூடிய ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் கூடிய ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5.5 இன்ச் 1920×1080 பிக்சல் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ், 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர், மாலி T830 GPU, 3 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ, டூயல் சிம் ஸ்லாட், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.9 அப்ரேச்சர், 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9 அப்ரேச்சர், கைரேகை ஸ்கேனர், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3300 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன், தங்கம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது. ஃபிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி விலை ரூ.10,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை நேற்று (ஜனவரி 3) துவங்கி நாளை ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.

விரைவில் அமேசான் தளத்திலும் இந்த மொபைல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close