ஜனவரி 20 முதல் விற்பனைக்கு வருகிறது சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம்: சிறப்பம்சங்கள்

சாம்சங் இந்தியா நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஆன்7 என்ற ஸ்மார்ட்ஃபோனை ரூ.12,990க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை காணலாம்.

சாம்சங் இந்தியா நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஆன்7 என்ற ஸ்மார்ட்ஃபோனை ரூ.12,990க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை காணலாம்.

சாம்சங் மால் என்ற ஆப் இந்த ஸ்மார்ட்ஃபோனில் உள்ளது. அதில் உள்ள கேமரா ஆப்ஷனை க்ளிக் செய்தால் நாம் வாங்க விரும்பும் பொருட்களை ஷாப்பிங் செய்யலாம் அல்லது அவற்றின் விலையை அறிந்துகொள்ளலாம்.

ரூ.12,990 மற்றும் ரூ.14,990 என்ற இரு விலைகளில் இந்த சாம்சங் கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அமேசான் மற்றும் சாம்சங் ஷாப் இணையத்தளங்கள் மூலம் மட்டுமே பெற முடியும். வரும் 20-ஆம் தேதி ‘அமேசான் கிரேட் இந்தியன் சேல்’ அன்று இந்த ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்கு வர உள்ளது.

இந்த ஸ்மார்ட்ஃபோன் கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும்.

5.5 இன்ச் முழு எச்.டி. திரை, 1,920*1,080 ரெசொல்யூஷன் டிஸ்பிளேவைக் கொண்டது. சாதாரண எல்.சி.டி. திரையைக் கொண்டது.

1.59 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 7870 பிராசஸர், 3ஜிபி அல்லது 4ஜிபி ரேம் (விலையை பொறுத்தது) உள்ளிட்டவற்றை கொண்டது. இதனை 32 ஜிபி முதல் 64 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் மெமரியை நீட்டித்துக்கொள்ளலாம். 3300 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளது. இதன் மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தால், ஒருநாள் வரை நீடிக்கும்.

இந்த ஸ்மார்ட்ஃபோனின் முன், பின் கேமராக்கள் 13 எம்பியைக் கொண்டது. எஃப்/1.9 அபெர்ச்சர், ஆட்டோ ஃபோக்கஸ் வசதிகளை கொண்டுள்ளது.

×Close
×Close