scorecardresearch

5ஜி வேகத்தில் இயங்கும் புதிய போனை வெளியிட்டு அசத்தும் சாம்சங்

மெஜஸ்டிக் ப்ளாக், ராயல் கோல்ட் மற்றும் க்ரவுன் சில்வர் நிறங்களில் இது வெளியாகிறது

1 million Samsung Galaxy S10 5G sold
1 million Samsung Galaxy S10 5G sold

Samsung Galaxy S10 5G specifications : சாம்சங் நிறுவனம் பிப்ரவரி மாத இறுதியில் எஸ் 10 போன்களையும் அதன் வேரியண்ட்டுகளையும் அறிமுகப்படுத்தியது. அதில் 5ஜி வேரியண்டை மட்டும் வெளிவிடாத நிலையில் ஏப்ரல் 5ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதை உறுதி செய்ததது அந்நிறுவனம்.

கொரியாவில் 5ஜி வேகத்தில் அந்த போன் வெளியாக உள்ளது. இதன் விலை 1285 அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்புப்படி 89,078 ரூபாய் ஆகும்.

எஸ் 10 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்10+ என இந்த இரண்டு போன்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகவே இருக்கும். இருப்பினும் எஸ்10+ போனானது 4ஜி மற்றும் எல்.டி.ஈ இணைய சேவைகளில் மட்டுமே இயங்கும்.

Samsung Galaxy S10 5G specifications

6.7 இன்ச் குவாட் எச்.டி திரை கொண்ட கர்வ்ட் டைனமிக் டிஸ்பிளே போனாகும்

இதில் நான்கு பின்பக்க கேமராக்கள் உள்ளன

4500mAh திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது

மற்ற போன்களை விட சிறப்பாக வேலை செய்யும்

8ஜிபி ரேம் இருப்பதால் இதன் செயல் திறன் மிகவும் வேகமாக இருக்கும் 256GB/512GB storage என இரண்டு இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது

மெஜஸ்டிக் ப்ளாக், ராயல் கோல்ட் மற்றும் க்ரவுன் சில்வர் நிறங்களில் இது வெளியாகிறது

மேலும் படிக்க : 150 நாட்களுக்கு இலவசமாக டிவி பார்க்க சிறப்பு சலுகை தரும் D2H…

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Samsung galaxy s10 5g specifications launch review price details and more

Best of Express