Samsung Galaxy S10 launch - சாம்சங் நிறுவனத்திடம் இருந்து வெகுநாட்களாக அவர்களின் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது இந்த போனைத் தான். சாம்சங்க் கேலக்ஸி எஸ் 10 (Samsung Galaxy S10).
அன்பேக்ட் என்று செல்லமாக பெயரிட்டிருக்கும் இந்த போனின் அறிமுகவிழாவானது சான்ஃபிரான்சிஸ்கோவில் கோலகலமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் 20ம் தேதி நடைபெறும் இந்த அறிமுக விழாவானது, சாம்சங் எஸ் சீரியஸ் தொடங்கியதன் 10ம் ஆண்டு விழாவாகவும் இந்த விழா கொண்டாடப்பட உள்ளது.
எஸ்10 மூன்று முக்கியமான வேரியண்ட்களில் வெளியாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் மேலும் மகிழ்ச்சியில் உள்ளனர். S10 lite, S10, S10+ என மூன்றூ வேரியண்ட்களில் வெளிவருகின்றன. 5ஜி தொழில்நுட்பத்துடன் இந்த போன்கள் வெளிவர இருப்பது போனஸ் மகிழ்ச்சி.
Samsung Galaxy S10 launch - லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்ப்பது எப்படி ?
போனின் அறிமுக விழாவை லைவ் நிகழ்ச்சியாக மாற்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களையும் காண வைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது சாம்சங்.
கடந்த முறை எஸ் சீரியஸ்ஸின் 9வது போனை மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்ஸில் வெளியிட்டது சாம்சங் நிறுவனம். இம்முறை அப்படியாக இல்லாமல் சான்பிராஸ்கோவில் வெளியிட திட்டமிட்டுள்ளது சாம்சங். இந்த விழாவின் மொத்த நிகழ்ச்சியையும் நீங்கள் www.samsung.com/galaxy - என்ற இணைப்பில் முழுமையாக கண்டு ரசிக்கலாம்.
மேலும் படிக்க : இந்த வருடம் தொடர்ந்து வெளியாக இருக்கும் போல்டபிள் போன்கள் ஒரு பார்வை