Samsung Galaxy S10 : சாம்சங்கின் ப்ரீமியம் போன் சீரியஸ்ஸான சாம்சங் கேலக்ஸியின் புதிய போன் அடுத்த வருடம் வெளியாக உள்ளது. 2019ம் ஆண்டின் முதல் பாதியில் இந்த சாம்சங் கேலக்ஸியின் புதிய போன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் மற்றும் வெரிசான் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இந்த போன் பயன்பாட்டிற்கு வரும் முதல் 5ஜி போன் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் டெலிக்கோ இது தொடர்பான அதிகாரப் பூர்வ அறிக்கை ஒன்றை வெளிட்டிருக்கிறது.
Samsung Galaxy S10 - ல் ஸ்நாப்ட்ராகன் ப்ரோசசர்
சாம்சங் மற்றும் வெரிசானில் இருந்து எந்த விதமான சிறப்பம்சங்கள் தொடர்பான அறிவிப்புகளும் வெளிவராத நிலையில், இந்த போனில் ப்ரோசசர் குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் பயன்படுத்தப்படும் என்றும், Snapdragon X50 5G NR மோடம், ஆன்டனா மாடல்கள், இண்டெக்ரேட்டட் ஆர்.எஃப். ட்ரான்சீவர், ஆர்.எஃப். ஃப்ரெண்ட் எண்ட் மற்றும் ஆண்டனா எலெமெண்ட்டுகள் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹூவாய் தீவுகளில் இருக்கும் மாவோய் பகுதியில் ஸ்நாப்ட்ராகனின் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்று வருகிறது. 5ஜி தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
வெரிசான் தொலைத்தொடர்பு நிறுவனம்
வெரிசான் தொலைத் தொடர்பு நிறுவனம் 5ஜி தொழில் நுட்பம் குறித்து தெரிவிக்கையில், “மக்களின் தொலைத்தொடர்பு பயன்பாட்டினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் 5ஜி தொழில்நுட்பம். சாம்சங் மற்றும் வெரிசான் நிறுவனமும் இணைந்து சில நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையினை அளிக்க உள்ளதாக” தெரிவித்துள்ளது. வெரிசான் 5ஜி சேவை 2019ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஆரம்பமாகிறது.
மேலும் படிக்க : 5ஜி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோட்டோ ஒடின்
சாம்சங் கேலக்ஸி S10 (Samsung Galaxy S10) சிறப்பம்சங்கள்
மூன்று வேரியண்ட்டுகளில் வெளியாகும் இந்த போன் முதலில் அமெரிக்கா, தென் கொரியா நாடுகளில் முதலில் வெளியாக உள்ளது.
அமெரிக்காவில் குவால்கோம் ப்ரோசசரில் வெளிவர உள்ளது. இந்தியாவில் எக்ஸினோஸ் 9820 ப்ரோசசரில் வெளிவர உள்ளது.
கேலக்ஸி ஏ8 போனில் பயன்படுத்தப்பட்ட இன்ஃபினிட்டி ஓ (Infinity-O) டிஸ்பிளே இந்த போனிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அல்ட்ராசோனிக் ஃபிங்க்ர் பிரிண்ட் மற்றும் மூன்று பின்பக்க கேமராக்கள் என அட்டகாசமாக வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி S10 (Samsung Galaxy S10) ஆகும்.