குடியரசு தினத்தையொட்டி அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. சிறந்த ப்ரீமியம் போன்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளலாம். ஐபோன், சாம்சங், கூகுள் உள்ளிட்ட போன்களுக்கும் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy S22 Ultra
Samsung Galaxy S22 Ultra கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது சிறந்த ப்ரீமியம் ஆண்ட்ராய்டு போன்களில் ஒன்றாக உள்ளது. Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, Galaxy S22 Ultra ஆனது 6.8 இன்ச் 120Hz AMOLED டிஸ்பிளே HDR10+ மற்றும் 1440 x 3088 ரிசொல்யூன் கொண்டது. ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும் இந்த ஃபோன், குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 10எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ், 10எம்பி டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 12எம்பி அல்ட்ராவைட் லென்ஸ் கொண்டது. 108எம்பி பிரைமரி ஷூட்டர் உள்ளது.
டாப்-ஆஃப்-லைன் ஹார்டுவேர் 5,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வெரியன்ட் கொண்டது. இந்த ப்ரீமியம் போன் அமேசானில் ரூ.92,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐபோன் 13
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 போனை 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்திருந்தாலும், இன்று வரையில் சிறந்த போனாக இருந்து வருகிறது. பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். Apple A15 Bionic சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதே சிப்செட் ஐபோன் 14 மற்றும் ப்ரோ வகைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த போன் 1170 x 2532 பிக்சல்கள் ரிசொல்யூசன் கொண்ட 6.1 இன்ச் சூப்பர் ரெடினா OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
ஐபோன் 13 டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது. அதில் 12எம்பி ப்ரைமரி ஷூட்டர் மற்றும் 12எம்பி அல்ட்ராவைட் லென்ஸ் உள்ளது. 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த போன் பிளிப்கார்ட்டில் ரூ.62,999க்கு வாங்கலாம்.
கூகுள் பிக்சல் 7
பிக்சல் 7 சந்தையில் சிறந்த ஸ்மார்ட்போனாக இல்லாவிட்டாலும், நிச்சயம் நீங்கள் விரும்பும் சிறந்த கேமரா போன்களில் ஒன்றாகும். 5nm செயல்முறையின் அடிப்படையில் கூகுள் இன்-பில்ட் தயாரிப்பில் டென்சர் G2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 6.3 இன்ச் 90 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது மற்ற ஃபிளாக்ஷிப் போன்களுடன் வேறுபடுகிறது.
கூகுளின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சமீபத்திய பதிப்பான ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் பிக்சல் 7 ஆனது 12எம்பி அல்ட்ராவைடு சென்சார் உடன் 50எம்பி முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. 4,355mAh பேட்டரி, 20W வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டது. கூகுள் பிக்சல் 7, 8GB ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. தற்போது ரூ.51,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.