சாம்சங் முன்னணி ஸ்மார்ட் போன் நிறுவனமாகும். பட்ஜெட் போன் முதல் ப்ரீமியம் போன்கள் வரை பயனர்களின் வசதிக்கு ஏற்ப விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தனது சமீபத்திய ப்ரீமியம் மாடல் போனான கேலக்சி எஸ்23, எஸ்23+ போன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
சாம்சங் அன்-பேக்டு 2024, அதாவது நிறுவனம் அடுத்த எஸ்24 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், இந்த போன்களின் விலையை ரூ.10,000 குறைத்துள்ளது. 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி எஸ்23 அடிப்படை வெரியண்ட் போன் ரூ.64,999க்கும், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் போன் ரூ.69,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், 256 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய கேலக்ஸி எஸ்23+ இன் அடிப்படை மாறுபாடு இப்போது ரூ.84,999 ஆகவும், 512 ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.94,999 ஆகவும் உள்ளது.
மேலும் ப்ளிப்கார்ட், அமேசான் தளங்களில் பேங்க ஆஃபர் மூலம் மேலும் ரூ.5,000 வரை தள்ளுபடி பெறலாம். சாம்சங் கேலக்சி எஸ்23, எஸ்23+ ஆகியவை சமீபத்திய ப்ரீமியம் மாடல் போன்களாகும். பல்வேறு ஹை-எண்ட் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து கேலக்ஸி எஸ் 24 சீரிஸ் போன் பல்வேறு ஏ.ஐ அம்சங்களுடன் நெக்ஸ்ட் ஜென் ஸ்மார்ட்
போன்களாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“