சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி எஸ் 24 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்தது. கேலக்ஸி எஸ்24, கேலக்ஸி எஸ்24 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஆகிய மூன்று போன்களைக் கொண்ட கேலக்ஸி எஸ்24 சீரிஸை நிறுவனம் அறிமுகம் செய்தது. Hardware upgrades மற்றும் கேலக்ஸி ஏ.ஐ மூலம் இயக்கப்படும் பல புதிய AI-ஆதரவு அம்சங்களுடன் வருகிறது. குறிப்பாக கூகுள் ஜெமினி நானோ வசதியையும் கொண்டுள்ளது.
Advertisment
ஆப்பிள் ஐபோனுக்கு சவால் விடும் வகையில் உலகம் முழுவதும் சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஐ செயல்பாடுகளை உள்ளடக்கிய இந்த போனில் தொலைபேசி அழைப்புகளின் போது ஒரே நேரத்தில் 13 மொழிகளில் குரலை மொழிபெயர்க்க முடியும். சாம்சங் S24 சீரிஸ் வரும் 31-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.
Chat Assist
சாம்சங் கீபோர்ட் பயன்பாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, Chat Assist என்பது AI-இயங்கும் அம்சமாகும், இது பல செயல்பாடுகளை வழங்குகிறது. Chat Translation பயன்படுத்தி, எந்தவொரு செயலியிலும் பயனர்கள் chats மொழிபெயர்க்க முடியும் என்று சாம்சங் கூறுகிறது. நீங்கள் ஒரு டெக்ஸ்ட் டைப் செய்திருந்தால் tonality of the text உள்பட அந்த டெக்ஸ்டை நீங்கள் கேட்கும் மொழியில் மொழி பெயர்க்கும்.
சர்க்கிள் டு சர்ச்
இது சாம்சங் பிரத்தியேக அம்சம் இல்லை என்றாலும், கேலக்ஸி எஸ்24 சீரிஸ்தான் முதலில் இந்த செயல்பாட்டைப் பெறுகிறது. பெயர் குறிப்பிடுவது போல, Google's Circle to Search அம்சம் மிகவும் உதவியாகவும் பயன்படுத்த எளிதாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட விஷயத்தை தேட வேண்டும் என்றால், இமேஜ் பற்றிய தகவல் வேண்டும் என்றாலும் அந்த இமேஜை வட்டமிடலாம். பின் ஸ்கிரீன் கீழே உள்ள கூகுள் சர்ச்சில் லாங் பிரஸ் செய்தால் இந்த இமேஜை வட்டமிட அனுமதிக்கும். அதை கூகுளில் அப்படியே தேடலாம்.
Live Translate
பெயர் குறிப்பிடுவது போல, Live Translate அம்சம் Real time, அதாவது நீங்கள் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்புகளை மொழிபெயர்க்க AI ஐப் பயன்படுத்துகிறது. OneUI இன் இயல்புநிலை டயலர் செயலி மூலம் பயன்படுத்துகிறது. பயனர்கள் அழைப்பில் இருக்கும்போது திரையில் தோன்றும் ‘Call Assist’ பட்டனை கிளிக் செய்வதன் மூலம் அம்சத்தை இயக்க முடியும். இது போன்று பல ஏ.ஐ தொழில்நுட்பங்களை கேலக்ஸி S24 சீரிஸில் சாம்சங் அறிமுகம் செய்துள்ளது.
விலை பட்டியல்
Samsung Galaxy S24, Galaxy S24+ மற்றும் Galaxy S24 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் இப்போது இந்தியாவில் ப்ரீ ஆர்டர் செய்யப்படுகின்றன, Galaxy S24-ன் ஆரம்ப விலை ரூ.79,999 மற்றும் 1 TB மாறுபாட்டின் விலை ரூ.1,59,999 ஆக உயர்கிறது. Galaxy S24 அல்ட்ரா. Galaxy S24 மற்றும் Galaxy S24+ ஆகியவை Exynos 2400 அடிப்படையிலானவை என்றாலும், முதன்மையான Snapdragon S24 Ultra ஆனது Snapdragon 8 Gen 3 SoC மூலம் இயக்கப்படுகிறது.