மொபைல் பிரியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற வரவேற்பை பெற்ற சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் மாடலின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா விரைவில் நடைபெறவுள்ளது. இதில், முன்னணி மொபைல் நிறுவனங்களில் சிறப்பான ஃபோன்கள் அறிமுகப்படுத்தவுள்ளன. இதில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது.
கடந்த வாரம் இந்த ஃபோனில் இடம்பெற்ற முக்கிய சிறப்பம்சங்களை சொல்லும் வகையில் மூன்று வகையான டீசர்கள் வெளியாகினர். இந்த டீசர் மொபைல் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் மொபைல் குறித்த எதிர்ப்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் மாடல் ஃபோனின் விலை ரூ.6,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. 32 ஜிபி ம்கொண்ட கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ரூ.35,900 க்கும், 128 ஜிபி கொண்ட கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ரூ.37,900 க்கு இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிறப்பு சலுகை சாம்சங் அறிவித்திருக்கும் புதிய தள்ளுபடி ஆஃப்லைன் முறையில் மட்டுமே பெற முடியும்.
இதனுடன், கூடுதலாக பே.டி.எம். சார்பில் ரூ.5,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் பெற வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் கியூ.ஆர். கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும். தள்ளுபடி அறிவிக்கப்படும் முன் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் விலை ஆஃப்லைனில் 32 ஜிபி ரூ.38,900 மற்றும் 128 ஜிபி ரூ.40,900 என நிர்ணம் செய்யப்பட்டிருந்தது.