பிரமிப்பூட்டும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ்!

ஸ்மார்ஃபோன்களை முன்பதிவு செய்ய சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பயன்படுத்த வேண்டும்

மொபைல் பிரியர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமாகின.

பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படவுள்ளதாக 6 மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியாகின. அன்று நால் முதல் இணையத்தில் தொடர்ந்து இந்த ஸ்மார்ஃபோன்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஒருவழியாக சாம்சங் அன்பேக்டு 2018 விழாவில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பிளாக், டைட்டானியம் கிரே, கோரல் புளூ மற்றும் லிலாக் பர்ப்பிள் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் புதிய எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ஃபோன்களை முன்பதிவு செய்ய சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பயன்படுத்த வேண்டும். இந்தியாபில் இதன் விலை தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 சிறப்பம்சங்கள்:

>12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா
> 8 எம்பி செல்ஃபி கேமரா
>64 ஜிபி , 128 ஜி[பி மெமரி ஸ்பேஸ்
>8.0 ஆண்ட்ராய்டு ஓரியோ
>3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 சிறப்பம்சங்கள்:

>12 எம்பி பிரைமரி கேமரா
>12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
> 8 எம்பி செல்ஃபி கேமரா
>3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
>8.0 ஆண்ட்ராய்டு ஓரியோ
>2960×1440 பிக்சல்

×Close
×Close