/indian-express-tamil/media/media_files/2025/09/07/samsung-galaxy-tab-s11-2025-09-07-12-19-06.jpg)
இனி டேப்லெட் பேசும், சிந்திக்கும்!... ஜெமினி ஏ.ஐ, உடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 11 சீரிஸ் அறிமுகம்!
செப்.5 அன்று சாம்சங் நிறுவனம், புதிய கேலக்ஸி டேப் S11 தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணத்தின்போது அதிக உற்பத்தித் திறனை வழங்கும் வகையில், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் இந்தத் தொடரில் கேலக்ஸி டேப் S11 அல்ட்ரா, கேலக்ஸி டேப் S11 ஆகிய மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
One UI 8 இயங்குதளத்தில் இயங்கும் இந்த டேப்லெட்கள் உரை, குரல், மற்றும் காட்சி உள்ளீடுகளைப் புரிந்துகொள்ளும் பன்முக AI (multimodal AI) தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இது பயனர்களின் உற்பத்தித் திறன், படைப்பாற்றல் மற்றும் கவனம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் உடனடி, சூழலுக்கு ஏற்ற பரிந்துரைகளை வழங்குகிறது.
ஏ.ஐ. அம்சங்கள்
ஜெமினி லைவ்: இந்த ஒருங்கிணைப்பு, லைவ் திரைபகிர்வு, காட்சி உள்ளீடுகளைச் செயல்படுத்த உதவுகிறது. இதன் மூலம் பயனர்கள் ஸ்கிரீனில் உள்ள தகவல்கள் பற்றி விவாதிக்கலாம். உதாரணமாக, வகுப்புக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டு, அதிலிருந்து முக்கியமான கருத்துக்களைச் சுருக்கலாம் அல்லது விளக்கப்படங்களை ஆராயலாம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பக்கவாட்டில் உள்ள பட்டனை அழுத்திப் பிடிப்பதன் மூலம், பயனர்கள் ஜெமினி ஏ.ஐ.யை ஆக்டிவேட் செய்து, ஒரு கட்டுரையைச் சுருக்கி அதை நேரடியாக சாம்சங் நோட்ஸ் (Samsung Notes)-ல் சேமிப்பது போன்ற வேலைகளை எளிதாகச் செய்யலாம். இதில், வரைபடங்களை கிராஃபிக்ஸ் ஆக மாற்றும் டிராயிங் அசிஸ்ட் (Drawing Assist), ரைட்டிங் அசிஸ்ட் (Writing Assist), மற்றும் சர்க்கிள் டு செர்ச் (Circle to Search) போன்ற அம்சங்கள் உள்ளன.
சிறப்பம்சங்கள்
புதிய கேலக்ஸி டேப் S11 தொடர், 3nm செயலியில் இயங்குகிறது. இது முந்தைய மாடலை விட 24% வேகமான CPU, 33% மேம்பட்ட NPU, மற்றும் 27% மேம்பட்ட GPU திறனை வழங்குகிறது. 2 மாடல்களிலும் Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே உள்ளது. இதன் உச்சபட்ச பிரகாசம் 1,600 நிட்ஸ் என்பதால், உட்புறம் மற்றும் வெளிப்புறம் என அனைத்து இடங்களிலும் துல்லியமான காட்சிகளைப் பெற முடியும்.
கேலக்ஸி டேப் S11 அல்ட்ரா, சாம்சங்கின் மிக மெல்லிய டேப்லெட் ஆகும். இது 5.1 மிமீ தடிமன், 692 கிராம் எடையுடன் வருகிறது. இதில் உள்ள 5.2 மிமீ பெசல்கள் (bezel) இதற்கு நேர்த்தியான தோற்றத்தைக் கொடுக்கின்றன. கேலக்ஸி டேப் S11 சிறியதாகவும், எடை குறைவாகவும் இருப்பதால் எளிதில் எடுத்துச் செல்லலாம்.
மேம்படுத்தப்பட்ட சாம்சங் டெக்ஸ் (Samsung DeX)
மேம்படுத்தப்பட்ட சாம்சங் டெக்ஸ், வெளிப்புற மானிட்டருடன் இணைக்கப்பட்டு, 2 ஸ்கிரீனிலும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யலாம். இதன் மூலம், ஒரு ஸ்கிரீனில் ஒரு பைலைப் பார்த்துக்கொண்டு மற்றொரு ஸ்கிரீனில் விளக்கக்காட்சி அளிக்கலாம். பயனர்கள் வெவ்வேறு வேலைகளுக்காக 4 தனிப்பட்ட ஸ்கிரீன்கள் உருவாக்கலாம். புக் கவர் கீபோர்டு ஸ்லிம் (Book Cover Keyboard Slim) உடன் இணைக்கும்போது, இதில் உள்ள பிரத்யேக கேலக்ஸி AI கீ மூலம் டேப்லெட் ஒரு மடிக்கணினி போல செயல்படுகிறது. இந்தத் தொடரில் உள்ள S Pen, ஒரு அறுகோண வடிவமைப்பு மற்றும் கூம்பு வடிவ முனையுடன் வருகிறது. இது அதிக சாய்வு கோணத்தில் எழுத உதவுகிறது. இதனால், இயல்பான மற்றும் துல்லியமான எழுத்து அனுபவம் கிடைக்கிறது.
கேலக்ஸி டேப் S11 தொடரின் விலை ரூ. 74,999 இல் தொடங்குகிறது. இது சாம்சங்கின் அதிகாரப்பூர்வ இணையதளம், பிரத்தியேக கடைகள், அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள், மற்றும் ஆன்லைன் தளங்களில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் ரூ. 10,000 வரை வங்கி கேஷ்பேக் பெறலாம். மாணவர்கள் கூடுதலாக ரூ. 6,000 தள்ளுபடி பெறத் தகுதியுடையவர்கள்.
கேலக்ஸி டேப் S11 அல்ட்ரா: Wi-Fi மற்றும் LTE வகைகளில் 12GB/256GB மற்றும் 12GB/512GB விருப்பங்களில் வருகிறது. இதன் விலை ரூ. 1,10,999 முதல் ரூ. 1,35,999 வரை இருக்கும்.
கேலக்ஸி டேப் S11: Wi-Fi மற்றும் LTE மாடல்களில் 12GB/128GB, 12GB/256GB மற்றும் 12GB/512GB விருப்பங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 80,999 முதல் ரூ. 96,999 வரை இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.