Samsung galaxy unpacked August 5 live, Samsung Tamil News: சாம்சங் நிறுவனம் ஆகஸ்ட் 5ம் தேதி இரவு 7.30 மணிக்கு சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிசை அறிமுகப்படுத்தியது. தென்கொரியாவை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனம், கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மட்டுமல்லாது, கேலக்ஸி டேப் எஸ் 7, கேலக்ஸி வாட்ச் 3, கேலக்ஸி பட்ஸ் லைவ் மற்றும் மடக்கும் வகையிலான கேலக்ஸ் இசட் போல்ட் 2 சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம், கேலக்ஸி அன்பேக் நிகழ்ச்சியை ப்ரீ -ரெக்கார்டட் வீடியோவாக வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு பதிலாக, தென்கொரியாவின் சுவோன் நகரத்தில் உள்ள சாம்சங் டிஜிட்டசல் சிட்டியில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisment
Samsung galaxy unpacked August 5 live: சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் அறிமுகம்
இரவு 7.30 மணிக்கு சாம்சங் கேலக்ஸி 20 சீரிஸ் அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் அதன் சமூக வலைதளங்களில் பலரும் கண்டு களித்தனர்.
சாம்சங் தனது கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 அல்ட்ரா மற்றும் ஆக்ஸிஜன் செறிவு, பிபி மற்றும் ஈசிஜி அளவீடுகளைக் கண்காணிக்கும் ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட பல சாதனங்களை அறிவித்துள்ளது.
Advertisment
Advertisements
சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ், ரெகுலர் நோட் மற்றும் அல்ட்ரா நோட் என்ற 2 வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. இந்த விழாவில் , சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் உடன், சாம்சங் நிறுவனத்தின் புதிய வரவான அடுத்த தலைமுறை போல்டபிள் ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது கேலக்ஸ் டேட் எஸ் 7 மற்றும் கேலக்ஸி டேப் எஸ் 4பிளஸ், புதிய கேலக்ஸி வாட்ச் 3, கேலக்ஸி பட்ஸ் லைவ் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேலக்ஸி நோட் 20 6.9 இஞ்ச் டைனமிக் அமோலெட் 120 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே உள்ளது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் புராசசர் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பிற்கு உள்ளது. 108 எம்பி பிரைமரி சென்சார் உடன் இணைந்து 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 12 எம்பி 5 எக்ஸ் பெரிஸ்கோப் லென்ஸ் உள்ளது. சாதாரண நோட் 20 சீரிசில், 60 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, எஸ் பென் மற்றும் ஸ்பெக்ட்டு டவுன் கேமராக்களே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil