கேலக்ஸி பயனர்களுக்கு குட்நியூஸ்: எக்கச்சக்க அம்சங்களுடன் சாம்சங் One UI 8 மல்டிமோடல் ஏ.ஐ வெளியீடு!

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஒன் யுஐ 8 இயங்குதளம், மல்டிமோடல் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் பல்வேறு கேலக்ஸி சாதனங்களில் அறிமுகமாகிறது. இது பயனர்களின் ஸ்மார்ட்போன் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஒன் யுஐ 8 இயங்குதளம், மல்டிமோடல் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் பல்வேறு கேலக்ஸி சாதனங்களில் அறிமுகமாகிறது. இது பயனர்களின் ஸ்மார்ட்போன் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Samsung One UI 8

கேலக்ஸி பயனர்களுக்கு குட்நியூஸ்: சாம்சங் One UI 8 மல்டிமோடல் ஏ.ஐ வெளியீடு!

சாம்சங் அதன் பயனர்களின் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல, ஒன் யுஐ 8 என்ற புதிய ஏ.ஐ. இயங்குதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் தளம், கேலக்ஸி எஸ் 25 சீரிஸ் ஃபோன்களில் இருந்து கிடைக்கவுள்ளது. இதன் பின்னர், இந்த ஆண்டு இறுதியில் கேலக்ஸி எஸ்24, கேலக்ஸி இசட் போல்ட் 6, கேலக்ஸி இசட் பிளிப் 6 போன்ற ஃபோன்களிலும் இது பயன்படுத்தப்படும். 

Advertisment

இந்த புதிய ஒன் யுஐ 8 ஓ.எஸ். பயனர்களின் அன்றாட வேலைகளை எளிமையாக்கவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள முக்கிய அம்சங்கள், தொழில்நுட்பம் என்பதைத் தாண்டி, பயனர்களுக்கு தனிப்பட்ட உதவியாளர்போல் செயல்படும்.

One UI 8 இன் அசத்தலான அம்சங்கள்

Now Bar & Now Brief: இந்த அம்சங்கள், உங்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு, பயணத் தகவல்கள், ரிமைண்டர் போன்றவற்றை வழங்கி, உங்கள் நாளைத் திட்டமிட உதவுகின்றன.

Circle to Search: கேம் விளையாடும்போது, திரையில் உள்ள ஏதேனும் ஒரு கேரக்டர் வட்டமிட்டால், அதுபற்றிய தகவல்கள் உடனே திரையில் தோன்றும். இது விளையாட்டின் நுணுக்கங்களை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும்.

Advertisment
Advertisements

Audio Eraser: வீடியோ அல்லது ஆடியோ பைல்களில் உள்ள தேவையற்ற பின்னணி இரைச்சலை, ஒரே கிளிக்கில் நீக்கிவிடும். இதனால், உங்கள் வீடியோக்கள் மேலும் தெளிவானதாக இருக்கும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Portrait Studio: இந்த ஏ.ஐ தொழில்நுட்பம், உங்கள் செல்லப்பிராணிகளின் படங்களை, துடிப்பான,கலைநயம் மிக்க ஸ்டுடியோ போர்ட்ரெய்ட் போல மாற்றிவிடும்.

Call Captions: கால் அழைப்பின்போது பேசப்படும் குரலை, உடனடியாக எழுத்துகளாக மாற்றித் தரும். இரைச்சல் மிகுந்த இடங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Gemini Live: பிளிப் ஃபோன்களின் வெளிப்புற திரையில் (FlexWindow), வாய்ஸ் உதவியாளராகச் செயல்படுகிறது. இது கைகளை பயன்படுத்தாமலே தகவல்களைத் தேட உதவும்.

Knox Security: KEEP மற்றும் Knox Matrix போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், உங்கள் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது.

ஒன் யுஐ 8 என்பது, ஏ.ஐயை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்வதற்கான முக்கியமான படியாகும். இது பயனர் நட்பு இடைமுகத்தையும், பலவிதமான ஏ.ஐ. திறன்களையும், கூடுதல் பாதுகாப்பையும் வழங்குகிறது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: