/indian-express-tamil/media/media_files/2025/08/07/samsung-speakers-2025-08-07-22-03-17.jpg)
ஏ.ஐ. சவுண்ட், 3D ஆடியோ: வீட்டையே மினி தியேட்டராக மாற்றும் சாம்சங்கின் புதிய சவுண்ட்பார்கள்!
சாம்சங் நிறுவனம், இந்திய ஆடியோ சந்தையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. உயர்தர ஒலியனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக, 2 புதிய சவுண்ட்பார் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை Samsung HW-Q990F மற்றும் Samsung HW-QS700F ஆகும். இந்தச் சவுண்ட்பார்கள், சினிமா தியேட்டர் போன்ற ஒலியனுபவத்தை வீட்டிலேயே வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிய சவுண்ட்பார்களின் மிகப்பெரிய பலம், அதன் கச்சிதமான வடிவமைப்புதான். இவை குறைவான இடத்தையே எடுத்துக்கொள்கின்றன. குறிப்பாக, இதில் உள்ள 6.5 இன்ச் சப்வூஃபர், முந்தைய மாடல்களைவிட 58% சிறியதாக இருந்தாலும், சக்திவாய்ந்த பாஸ் ஒலி உருவாக்குகிறது. Gyro Sensors மூலம், சவுண்ட்பாரின் நிலைக்கேற்ப ஒலியைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் வசதி இருப்பதால், அதை எந்த இடத்திலும் வைக்கலாம்.
இந்த சவுண்ட்பார்கள் AI தொழில்நுட்பத்துடன் வருகின்றன. AI Sound Optimisation மற்றும் Dynamic Bass Control போன்ற அம்சங்கள், பார்க்கும் அல்லது கேட்கும் கண்டெண்ட்டுக்கு ஏற்றவாறு ஒலியை மேம்படுத்துகின்றன. திரைப்படங்களில் வரும் உரையாடல்கள் தெளிவாக கேட்க, Active Voice Amplifier Pro என்ற வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம், பின்னணி இசை சத்தமாக இருந்தாலும், உரையாடலைத் தெளிவாகக் கேட்க முடியும்.
Samsung-ன் Q-Symphony Pro தொழில்நுட்பம், இந்த சவுண்ட்பார்களை Samsung TV-க்களுடன் இணைக்கும்போது, ஒலியின் பரிமாணத்தை மேலும் விரிவுபடுத்துகிறது. கேபிள்கள் இல்லாத வயர்லெஸ் Dolby Atmos ஆதரவு, 3D ஒலி அனுபவத்தை அளிக்கிறது. இது சினிமா தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். HW-Q990F மாடல் 11.1.4-சேனல் முழு சரவுண்ட் ஒலியை வழங்குகிறது. HW-QS700F மாடல் 3.1.2-சேனல் ஒலியை வழங்குகிறது.
Samsung HW-Q990F: ரூ.92,990, Samsung HW-QS700F: ரூ.35,990 சாம்சங் நிறுவனத்தின் 2025-ம் ஆண்டு Q-சீரிஸ் சவுண்ட்பார்களின் விலை ரூ.14,990 முதல் தொடங்குகிறது. இந்த சவுண்ட்பார்களை சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம், இ-காமர்ஸ் தளங்கள், சில சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கலாம். இந்த சவுண்ட்பார்கள் பல்வேறு பிளாட்ஃபார்ம்களுடன் இணக்கமாக உள்ளன.
SmartThings, Alexa, Google Assistant, Chromecast மற்றும் AirPlay போன்ற வசதிகள் இதில் இருப்பதால், உங்கள் ஸ்மார்ட் சாதனங்களை எளிதாக இணைக்கலாம். அத்துடன், விளையாட்டுகளை விளையாடும்போது சிறந்த ஒலியனுபவத்திற்காக Game Pro Mode என்ற பிரத்யேக வசதியும் உள்ளது. இந்த புதிய சவுண்ட்பார்களின் அறிமுகம், உயர்தர ஆடியோவை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு புதிய தேர்வை வழங்கியுள்ளது. இதன் மூலம், வீட்டின் வரவேற்பறையே மினி தியேட்டராக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.