Advertisment

6,000 mAh பேட்டரி, ட்ரிப்பிள் கேமரா... கலக்கும் சாம்சங் கேலக்ஸி F41

Mobile Phone News: கருப்பு, பச்சை மற்றும் நீல வண்ண பதிப்புகளில் தொலைபேசி கிடைக்கும் எனவும் தெரிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samsung Galaxy F 41

Samsung Mobile Phone News

Samsung Mobile Phone News: சாம்சங் நிறுவனம் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு விலை பிரிவுகளில் புதிய அலைபேசிகளை அறிமுகப்படுத்துவதில் இடைவிடாமல் உள்ளது. பண்டிகை காலம் நெருங்குகையில், சும்மா இருக்குமா என்ன? சாம்சங் தனது புத்தம் புதிய கேலக்ஸி எஃப் தொடருடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. தென் கொரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான சாம்சங், எஃப் தொடரின் டீஸரை இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதே நேரத்தில் அதன் முதல் கேலக்ஸி எஃப் 41 சாதனம் கடந்த வாரம் பிளிப்கார்ட்டால் வெளியிடப்பட்டது.

Advertisment

இத்தனை வசதிகளும் ஐஓபி வங்கியில் இருக்கும் போது வேறென்ன வேண்டும்!

அக்டோபர் 8-ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எஃப் 41 மொபைலை அறிமுகப்படுத்துகிறது. கூடுதலாக, சாம்சங் கேலக்ஸி எம் 41, மற்றும் கேலக்ஸி ஏ 51 ஃபோன்களும், அக்டோபர் மாதத்தில் அறிமுகமாகும் எனத் தெரிகிறது. சரி சாம்சங் எஃப்-சீரிஸ் ஸ்மார்ட்போனில் இருக்கும் சில சுவாரஸ்யமான அம்சங்களை விரைவாகப் பார்ப்போம்.

சந்தையில் வெளியாகியுள்ள பல்வேறு கசிவுகளின் படி, சாம்சங் கேலக்ஸி எஃப் 41, அண்ட்ராய்டு 10-க்கு வெளியே இயங்கும். அதோடு சாம்சங்கின் எக்ஸினோஸ் 9611 சிப்செட்டுடன் தொகுக்கப்படும். 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் இது இயங்கும். 1080 x 2400 பிக்சல்கள் மற்றும் 405 பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட திரை, தெளிவுத்திறன் கொண்ட இன்ஃபினிட்டி யு வடிவமைப்பில் மெலிதான சூப்பர் அமோலட் டிஸ்ப்ளே 20: 9 என்ற விகிதத்தில், இந்த தொலைபேசி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமான சார்ஜிங் திறன் கொண்ட, யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜரைக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கேலக்ஸி எஃப் 41 ரக ஃபோன்கள், 6 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் வகைகளுடன், 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் ஜோடியாக வருவதாகவும் வதந்தி பரவியுள்ளது. மேலும், கருப்பு, பச்சை மற்றும் நீல வண்ண பதிப்புகளில் தொலைபேசி கிடைக்கும் எனவும் தெரிகிறது.

நேரலைக்கு வந்த பிளிப்கார்ட் பக்கம், தொலைபேசி மூன்று கேமரா அமைப்போடு வருவதாக தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு 64 எம்.பி முதன்மை கேமராவிலும், வைட் ஆங்கிள் கேமரா மற்றும் டெப்த் சென்சாரிலும் அணிந்திருக்கலாம் என்றும் யூகங்கள் பரவலாக உள்ளன. 6,000 mAh பேட்டரி மற்றும் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும் இதன் சிறப்பம்சங்களில் முக்கியமானவை.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment