Samsung M Series Offers Tamil News: இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாம்சங் கேலக்ஸி தனது M31-ஐ அறிமுகப்படுத்திய பின்னர், பண்டிகை காலத்தை அடுத்து சாம்சங் அதன் பயனர்களுக்கு சில சுவாரஸ்யமான படைப்புகளைக் கொண்டுவரவுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட M சீரிஸ், பயனர்களிடையே மிகவும் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து, அமேசான் இந்தியாவுடன் இணைந்து சிறப்பாக உருவாக்கப்பட்ட கேலக்ஸி M31 ப்ரைமின் அனைத்து புதிய பதிப்பையும் கொண்டுவருவதாகக் கடந்த அக்டோபர் 14-ம் தேதி சாம்சங் அறிவித்தது.
அமேசானின் தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ், அக்டோபர் 17-ம் தேதி தொலைபேசியின் விற்பனை தொடங்கும் என்று சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது. ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 16 முதல் சலுகைகள் கிடைக்கும். கேலக்ஸி M31-ன் இந்த சிறப்புப் பதிப்பு 3 மாத காலத்திற்கு அமேசான் ப்ரைமின் காம்ப்ளிமென்டரி சந்தாவுடன் வரும். அதோடு, பொழுதுபோக்கு மற்றும் பிற செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைந்த அமேசான் செயலிகளுடன் இது தொகுக்கப்படும்.
இந்த இடைப்பட்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,499 மற்றும் அமேசான் விற்பனையின் முதல் நாளில் ரூ.1,000 சிறப்புத் தள்ளுபடியையும் வழங்க இருக்கிறது. மேலும், HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு விற்பனையின் போது கூடுதல் 10 சதவிகித தள்ளுபடியும் கிடைக்கும்.
6.4 இன்ச் AMOLED இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளேவுடன் சாம்சங் கேலக்ஸி M31 வருகிறது. 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் சாம்சங்கின் சொந்த எக்ஸினோஸ் 9611 ப்ராசசர் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. மேலும், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கிக்கொள்ளலாம்.
பின்புறத்தில், 64 MP முதன்மை கேமரா, 8 MP அல்ட்ரா-வைட் கேமரா, 5 MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 5 MP டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட குவாட்-கேமரா அமைப்பு இருக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் வசதியுடன், முன்பக்கத்தில் 32 MP செல்ஃபி கேமரா இருக்கிறது. பேட்டரியைப் பொருத்தவரை, 15W டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜரால் இயக்கப்படும் 6,000 mAh பேட்டரியுடன் கேலக்ஸி M31 இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய பதிப்பு ஓஷன் ப்ளூ, ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஐஸ்பெர்க் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"