அதிவேக கேமிங் அனுபவம்: 500Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட உலகின் முதல் OLED மானிட்டரை வெளியிட்டது சாம்சங்!

சாம்சங் நிறுவனம் அமெரிக்காவில் தனது புதிய கேமிங் மானிட்டர்களை அறிமுகப்படுத்தியது. இதில், உலகின் முதல் 500Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட OLED கேமிங் மானிட்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சாம்சங் நிறுவனம் அமெரிக்காவில் தனது புதிய கேமிங் மானிட்டர்களை அறிமுகப்படுத்தியது. இதில், உலகின் முதல் 500Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட OLED கேமிங் மானிட்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

author-image
WebDesk
New Update
Samsung Odyssey OLED G6 Gaming Monitor

அதிவேக கேமிங் அனுபவம்: 500Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட உலகின் முதல் OLED மானிட்டர்!

சாம்சங் நிறுவனம் அமெரிக்காவில் தனது புதிய கேமிங் மானிட்டர்களை அறிமுகப்படுத்தியது. இதில், உலகின் முதல் 500Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட OLED கேமிங் மானிட்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. Odyssey OLED G6 எனப் பெயரிடப்பட்ட இந்த மானிட்டருடன், 37இன்ச் மற்றும் 40-இன்ச் அளவுகளில் Odyssey G7 சீரிஸ் மானிட்டர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இந்த மாடல்களை அறிமுகப்படுத்துவது குறித்து Samsung இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Advertisment

Samsung Odyssey OLED G6-இன் விலை அமெரிக்காவில் $999.99 (இந்திய மதிப்பில் தோராயமாக ₹87,600). 37-இன்ச் Odyssey G7 மானிட்டரின் விலை $899.99 (தோராயமாக ₹78,700), 40-இன்ச் Odyssey G7 மானிட்டரின் விலை $1,199.99 (தோராயமாக ₹1,05,000). இந்த 3 மானிட்டர்களும் சாம்சங்கின் அமெரிக்க இணையதளம் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Odyssey OLED G6 மானிட்டர், வேகமான கேமிங் அனுபவத்தை விரும்புபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 27-இன்ச் குவாட் HD (2,560×1,440 பிக்சல்கள்) QD-OLED டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 500Hz வரையிலான வேரியபிள் ரீஃப்ரெஷ் ரேட் மற்றும் அதிவேகமான 0.03ms ரெஸ்பான்ஸ் டைம் கொண்டுள்ளது. இதன் பீக் பிரைட்னஸ் 1,000 nits வரையிலும், வழக்கமான பிரைட்னஸ் 300 nits வரையிலும் உள்ளது. இதில் HDR10+ கேமிங், VESA DisplayHDR True Black 500 சான்றிதழ்கள் உள்ளன. மேலும், இதில் உள்ள UL Glare Free கோட்டிங், ஒளியின் பிரதிபலிப்பைத் தடுப்பதால் கண்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. Black Equaliser, Eye Saver Mode, மற்றும் Flicker-Free போன்ற தொழில்நுட்பங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

Samsung-ன் OLED Safeguard+ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பர்ன்-இன் சிக்கலைத் தடுக்க உதவுகிறது. இதற்காக, உள்ளமைக்கப்பட்ட டைனமிக் கூலிங் சிஸ்டம், பல்சேட்டிங் ஹீட் பைப்ஸ் மற்றும் கிராஃபைட் ஷீட்கள் ஆகியவை இதில் உள்ளன. இதில் இரு HDMI 2.1 போர்ட்கள், ஒரு DisplayPort 1.4, ஒரு 3.5mm ஹெட்போன் ஜாக், ஒரு USB 3.2 Type-B போர்ட், மற்றும் இரண்டு USB 3.2 Type-A போர்ட்கள் உள்ளன. இதன் ஸ்டாண்டை உயர, ஸ்விவல், டில்ட் போன்ற பல கோணங்களில் சரிசெய்ய முடியும். மானிட்டரின் பின்புறத்தில் RGB லைட்டிங்கும் உள்ளது.

Advertisment
Advertisements

இந்த Odyssey G7 சீரிஸ் மானிட்டர்கள், அற்புதமான காட்சிகளுடன் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. 37-இன்ச் மாடல், 4K ரெசல்யூஷன், 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 165Hz ரீஃப்ரெஷ் ரேட் கொண்ட வளைந்த VA பேனல் கொண்டுள்ளது. 40-இன்ச் மாடல், இதுவும் வளைந்த VA பேனல் (1000R கர்வேச்சர்) கொண்டது, ஆனால் 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் வேகமான 180Hz ரீஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. 2 மாடல்களிலும் 3,000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ இருப்பதால், அடர்ந்த கருப்பு நிறம் மற்றும் துடிப்பான வண்ணங்களை அனுபவிக்க முடியும். AMD FreeSync Premium Pro, HDR10, HDR10+ கேமிங் மற்றும் VESA DisplayHDR 600 போன்ற சான்றிதழ்களும் இதில் உள்ளன.

2 மாடல்களிலும் இரு HDMI 2.1 போர்ட்கள், ஒரு DisplayPort 1.4, ஒரு 3.5mm ஹெட்போன் ஜாக், ஒரு USB 3.2 Type-B போர்ட், மற்றும் இரு USB 3.2 Type-A போர்ட்கள் உள்ளன. 40-இன்ச் மாடலில், ஒரே நேரத்தில் 2 ஸ்கிரீன்களைப் பயன்படுத்தும் (Picture-by-Picture, Picture-in-Picture) வசதி உள்ளது. 2 மாடல்களிலும் உயரத்தை சரிசெய்யும் ஸ்டாண்ட் உள்ளது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: