பண்டிகை காலம் தொடங்கி உள்ள நிலையில் அமேசான், பிளிப்கார்ட் உள்பட இ-காமர்ஸ் நிறுவனங்கள் தொடங்கி பல நிறுவனங்கள் பயனர்களைக் கவர தங்கள் பொருட்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்குகின்றன. அந்த வகையில் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் தனது சொந்த விற்பனையான Fab Grab Fest-ஐ தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப் என அனைத்திற்கும் தள்ளுபடி வழங்குகிறது.
கேலக்ஸி சீரிஸ் போன்களுக்கு 45% தள்ளுபடியும், Galaxy டேப்லெட்க்கு 41% வரை தள்ளுபடியும், Galaxy லேப்டாப்க்கு 36% வரை தள்ளுபடியும் வழங்குகிறது. இன்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது. Samsung.com, Samsung பிரத்தியேக கடைகள் மற்றும் Samsung ஷாப் செயலியில் இந்த பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
கேலக்ஸி இசட் சீரிஸ், எஸ் சீரிஸ், ஏ சீரிஸ், எம் சீரிஸ் மற்றும் எஃப் சீரிஸ் உள்ளிட்ட கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு 45% வரை தள்ளுபடியை ‘Fab Grab Fest’ வழங்குகிறது. Galaxy Z Flip5- போனும் குறைந்த விலைக்கு வாங்கலாம்.
Galaxy டேப்லெட்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் வாடிக்கையாளர்கள் 41% வரை தள்ளுபடி பெறலாம் (புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy Tab S9 Series, Galaxy Tab S9 FE மற்றும் Galaxy Tab S9 FE+ உட்பட) டேப்லெட் தள்ளுபடி பெறலாம்.
HDFC, ICICI மற்றும் வேறு சில வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கூடுதலாக 20% வரை கேஷ்பேக் பெறலாம்
இந்த விற்பனையில் சாம்சங் டிவிகள், டிஜிட்டல் அப்லையன்ஸ்களுக்கு 54% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. முன்னணி டி.வியான Neo-QLED, QLED, OLED, 4K UHD டிவி டி.விக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் QLED மற்றும் Neo QLED டிவிகளின் 98 அங்குல மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச Galaxy S23 Ultra 5G ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
மேலும் சாம்சங்கின் அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. நேரடியாக கடைகளில், ஆப்-ல் பொருட்களை வாங்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“