Samsung Tab News In Tamil: நீணட காலமாக tablets பற்றியுள்ள உரையாடல்கள் iPad’ ஐ சுற்றியே இருந்தது. அதனால் ஆண்ட்ராய்டில் விருப்பதேர்வுகள் எதுவும் இல்லை என்று அர்த்தமில்லை. இதை மனதில் வைத்துதான் சாம்சங் Tab S6 lite என்ற 10.4-inch tablet ஐ LTE connectivity உடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் Samsung Tab S6 Lite (LTE)ன் விலை ரூபாய் 31,999/-
Samsung Tab S6 Lite விவரக்குறிப்புகள் (Specifications): 10.4-inch (1200 x 2000 pixels, 224 ppi density) TFT டிஸ்ப்ளே | Exynos 9611 + Mali-G72 MP3 GPU | 64GB storage | 8MP rear + 5MP முன்பக்க கேமரா | Android 10 | 467 g
Samsung Tab S6 Lite price and features: சாம்சங் எஸ்6 லைட் tab
Samsung Tab S6 Lite உண்மையிலேயே மிகவும் மெலிதானது, அதுவும் எவ்வளவு மெலிதானது என்றால் வழக்கமான ஸ்மார்ட் கைபேசிகளை போன்று மெலிதானது. இதன் வலது விளிம்பில் power மற்றும் volume பொத்தான்கள் உள்ளன, SIM slot இடது பக்கத்தில் உள்ளது.
டிக்-டாக்கிற்கு மாற்றாக வரும் புதுவரவுகள்! நிதானமாக களமாட நினைக்கும் ”ப்ராண்ட்கள்”
Kindle ல் ஒரு புத்தகத்தை வாசிக்க அல்லது உங்கள் குழந்தையுடன் மொட்டைமாடிக்கு சென்று game விளையாட, ஒரு கையில் வைத்துக் கொள்ளும்படியான சரியான அளவில் உள்ளது Samsung Tab S6 Lite.
இதன் டிஸ்ப்ளே crystal clear ஆக உள்ளது மேலும் இதன் aspect ratio சினிமா அனுபவத்தை வழங்குகிறது அதுவும் குறிப்பாக Netflix போன்ற ஆப்பில் பார்க்கும் போது. Headphone இல்லாமல் உள்ளடக்கத்தை பார்க்கும் போதும் ஆடியோ தரம் சிறப்பாக உள்ளது.
Samsung Tab S6 Lite உள்ள octa-core Exynos processor காரணமாக gaming முதல் புகைப்படங்களை திருத்துதல் போன்ற எல்லா வேலைகளுக்கும் ஏற்றதாக உள்ளது. பலபணிகளை (multitasking) செய்யும் போதும் இந்த சாதனம் பொதுவாக சூடாவதில்லை.
இதன் மென்பொருள் UI, Samsung Galaxy சாதனத்தில் உள்ளது போலவே உள்ளது, tablet க்கான தனிபயனாக்கம் (customisations) எதுவும் இல்லை. ஆனால் பாதுகாப்பு தனிபயனாக்கம் சிறப்பாக உள்ளது மேலும் உங்களது browsing அனுபவம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
Samsung Tab S6 Lite tablet உடன் ஒரு Logitech keyboard ஐ இணைத்து பயன்படுத்தும் போது இது சிறந்த கணினி போல செயல்படுகிறது. குழந்தைகளுக்கான குறைந்த சிக்கலான கணினி சாதனத்தை வழங்க விரும்புவோருக்கு Samsung Tab S6 Lite tablet ஒரு நல்ல தேர்வு.
குறைந்த விலையிலும் பெஸ்ட் போன் எது? Redmi 9, Redmi 9A பற்றி அலசல்
இந்த சாதனத்தில் உள்ள 5MP முன்பக்க கேமரா மூலம் Zoom call களை வீட்டின் உள்ளே இருந்தே செய்ய முடியும். மேலும் பின்பக்கத்தில் உள்ள 8MP கேமரா மூலம் ஏதாவது முக்கியமான பொருட்களை தெளிவாக Zoom call மூலம் அடுத்தவர்களுக்கு காண்பிக்கவும் முடியும். இதில் உள்ள பேட்டரி ஒரு நாள் முழுக்க நீடிக்கிறது.
நீங்கள் உங்கள் வேலை மற்றும் கேளிக்கை ஆகியவற்றுக்காக ஒரு tablet ஐ தேடினால் அதற்கான ஒரே தீர்வு Samsung Tab S6 Lite தான். குழந்தைகளின் online வகுப்புகளுக்கு முழு அளவிலான கணினி தேவையில்லை அதற்கு பதிலாக இந்த Samsung Tab S6 Lite சரியான தேர்வாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.