Samsung Galaxy M31s: ரீசனபிள் ரேட்… ‘டாப்’பான வசதிகள்… அப்போ இதைப் பாருங்க!

samsung galaxy m31s- நீங்கள் உங்கள் பழைய போனை மாற்ற விரும்பினால், உங்களுக்கு சாம்சங் கேலக்ஸி எம்31 எஸ் போன் சிறந்த தேர்வாக இருக்கும்.

By: August 7, 2020, 9:45:09 AM

samsung tamil news, samsung galaxy m31s review: உயர்தர வசதிகள் கொண்ட போன்களை விரும்பாதவர்களுக்கு இனிய வரப்பிரசாதமாக அறிமுகமாகியுள்ளது சாம்சங் கேலக்ஸி எம் 31எஸ் ஸ்மார்ட்போன். பெரிய டிஸ்பிளே, அதிவேக திறன் கொண்ட புராசசர், நீண்டகாலம் உழைக்கும் பேட்டரி, சிறந்த கேமராக்கள் கொண்ட போனின் விலை ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஆகும் நிலையில், சாம்சங் நிறுவனம் ரூ. 19,499 விலையில், சாம்சங் கேலக்ஸி எம் 31எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samsung Galaxy M31s specifications:

6.5 இஞ்ச் புல் ஹெச்டி பிளஸ் மற்றும் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, சாம்சங் எக்ஸினோஸ் 9611, 6 ஜிபி ராம் / 8 ஜிபி ராம், 128 ஜிபி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்டி சப்போர்ட், 6000 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி, 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், 32 எம்பி முன்பக்க கேமரா, 64 எம்பி மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் சுங்கிள் கேமரா, 5 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, ஆண்ட்ராய்டு 10 ஒன் யுசர் இன்டர்பேஸ் உள்ளன.

 

samsung tamil news samsung galaxy m31s Mobile Phone price review samsung galaxy m31s Mobile Phone review

Samsung Galaxy M31s review: இதில் என்ன புதுசு?

சாம்சங் கேலக்ஸி எம் 31எஸ் டிசைன், கேலக்ஸி ஏ 51 ஸ்மார்ட்போனின் டிசைனை நினைவுபடுத்துகிறது. போனின் முன்பக்கத்தில் 6.5 இஞ்ச் அமோலெட் டிஸ்பிளே, முன்பக்க கேமராவில் சிறிய துளை, இடது மேற்புறத்தில், ரெக்டாங்குலர் கேமரா பம்ப். இந்த செட்டப், கேலக்ஸி எஸ்20 சீரிசை ஒத்துள்ளது. இடதுபக்கத்தில் சிம் டிரே, வலது பக்கத்தில் பவர் பட்டன், இது பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் வால்யூம் டிராக்கராக செயல்படுகிறது. அடிப்புறத்தில், யுஎஸ்சி – சி போர்ட், ஸ்பீக்கர் மற்றும் ஹெட்போன் ஜேக் உள்ளது.
6.5 இஞ்ச் திரை, கைகளில் பிடிப்பதற்கு ஏதுவாக உள்ளது. மற்ற பெரிய போன்களை ஒப்பிடும்போது, இதன் டிசைன் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது, கேலக்ஸி ஏ 51 போனைப்போன்றே, கேலக்ஸக எம் 31 ஸ்மார்ட்போனிலும், பேனல் பிளாஸ்டிக்கினாலும், பினிஷிங் கண்ணாடி போன்றும் உள்ளது. கேலக்ஸி எம் 31 போன், மிராஜ் பிளாக் மற்றும் மிராஜ் புளு நிறங்களில் கிடைக்கிறது.

 

samsung tamil news samsung galaxy m31s Mobile Phone price review samsung galaxy m31s review

என்ன சிறப்பம்சம்?

கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போனில் பெரிய டிஸ்பிளே தான் இதன் பலம். 6.5 இஞ்ச் புல் ஹெச்டி, சூப்பர் அமோலெட் திரை படம் பார்ப்பதற்கும், வீடியோக்களை எடிட் செய்வதற்கும், இ-பேப்பர்களை எளிதாக படிப்பதற்கும் உதவுகிறது. டிஸ்பிளே நன்கு பிரகாசமாகவும், கலர்புல்லாகவும் உள்ளது. சாம்சங் அமோலெட் டிஸ்பிளேவில், 60 ஹெர்ட்ஸ் ரெப்ரஷ் ரேட், மற்ற எந்த இதுபோன்ற விலைகுறைந்த போனிலும் இல்லாத சிறப்பு ஆகும்.

இந்த போனில் உள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் பக்கவாட்டில் தரப்பட்டுள்ளது. மற்ற போன்களை ஒப்பிடும்போது இந்த வசதி, நாம் மிக விரைவாக போனை கையாள உதவுகிறது.

 

samsung tamil news samsung galaxy m31s Mobile Phone price review samsung tamil news

கேலக்ஸி எம் 31 போனைப்போன்றே, கேலக்ஸி எம் 31எஸ் போனிலும், எக்சினாஸ் 9611 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் போனிலேயே, கேம்ஸ்களை விளையாட முடிகிறது, போட்டோ மற்றும் வீடியோக்களை துல்லியமாக எடுக்க முடிகிறது. இணையதளங்கள் வேகமாக ஓபன் ஆகின்றன. இதற்கு மேல் என்ன வேண்டும்?

அடுத்த வேரியன்ட் ஆன 8 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் போனில், 512 ஜிபிக்கான இடம் போனே எடுத்துக்கொள்கிறது, எனவே, மற்றவர்களின் அபிமான தேர்வாக இருக்க வாய்ப்பில்லை.

 

samsung tamil news samsung galaxy m31s Mobile Phone price review samsung tamil news

 

samsung tamil news samsung galaxy m31s Mobile Phone price review samsung tamil news

 

samsung tamil news samsung galaxy m31s Mobile Phone price review samsung tamil news

 

samsung tamil news samsung galaxy m31s Mobile Phone price review samsung tamil news

 

samsung tamil news samsung galaxy m31s Mobile Phone price review samsung tamil news

சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் போனில் 6 ஆயிரம் மெகா ஹெர்ட்ஸ் பேட்டரி இருப்பதால் முழுமையாக சார்ஜ் ஏற்றினால், 2 நாட்கள் வரை இருக்கும். இந்த போனில் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜர் உள்ளது.

போனின் பின்புறத்தில் 64 எம்பி பிரைமரி சோனி ஐஎம்எக்ஸ் 682 சென்சார் விட் எப் /1.8 லென்ஸ், 12 எம்பி செகண்டரி சென்சார் வித் 120 டிகிரி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி டெப்த் சூட்டர் மற்றும் 5 எம்பி மேக்ரோ லென்ஸ் உள்ளது. போனின் விலையை ஒப்பிடும்போது சிறப்பான கேமராக்கள் உள்ளது இதன் தனிச்சிறப்பு ஆகும்.

 

samsung tamil news samsung galaxy m31s Mobile Phone price review samsung tamil news

இதில் போர்ட்ரேட் மோடு மட்டுமல்லாது டெடிகேடட் மேக்ரோ மோடும் உள்ளது. குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான படங்களை எடுக்க முடியும். இளைய தலைமுறையினரை இந்த போன் மிகவும் கவரும்.

முன்பக்கத்தில் உள்ள 32 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா, செல்பி எடுப்பதற்கு, வீடியோ கால் பேசுவதற்கு சிறந்த தேர்வாக உள்ளது.

 

samsung tamil news samsung galaxy m31s Mobile Phone price review samsung tamil news

 

பலவீனம்

மற்ற போன்களில், ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் யுசர் இன்டர்பேஸ் போன்றவை மேம்படுத்தப்பட்ட அளவில் உள்ளநிலையில், இந்த கேலக்ஸி எம் 31 எஸ் போனில், ஆண்ட்ராய்ட் 10 உடன் சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுசர் இன்டர்பேஸ்2 உள்ளது. இது மிகவும் பழைய அப்டேட் என்பது ஏமாற்றமளிப்பதாக உள்ளது

என்ன விலை?

6.5 இஞ்ச் அமோலெட் டிஸ்பிளே, சிறந்த கேமரா, அதிகதிறன் கொண்ட பேட்டரி, சிறந்த புராசசர், தரமான ஹெட்போன் ஜேக் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் போனின் விலை ரூ.19,499ல் இருந்து துவங்குகிறது. இது ஒன்பிளஸ் நோர்ட் போனிற்கு கடும்போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் நோர்ட் போனின் விலை ரூ.24,999 முதல் ஆரம்பமாகிறது.

நீங்கள் உங்கள் பழைய போனை மாற்ற விரும்பினால், உங்களுக்கு சாம்சங் கேலக்ஸி எம்31 எஸ் போன் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Samsung smartphone oneplus nord galaxy m31s samsung galaxy m31s sale in india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X