‘ரிச்’ லுக்… செம்ம வாட்ச்…! சாம்சங் கேலக்ஸி 3- கேலக்ஸி பட்ஸ் இப்போது இந்தியாவில்!

samsung galaxy watch 3: Samsung tamil news, samsung galaxy watch 3 price: சாம்சங் இறுதியாக தனது கேலக்ஸி வாட்ச் 3 மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

By: August 19, 2020, 9:00:38 AM

Samsung tamil news, samsung galaxy watch 3 price: சாம்சங் இறுதியாக தனது கேலக்ஸி வாட்ச் 3 மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு சாதனங்களும் கேலக்ஸி நோட் 20 தொடருடன் Galaxy Unpacked event-ல் அறிமுகம் செய்கிறது. கேலக்ஸி வாட்ச் 3 மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ் பற்றி சில தகவல்கள் இங்கே,

samsung galaxy watch 3: கேலக்ஸி வாட்ச் 3

:இந்தியாவில் samsung galaxy watch 3 விலை மற்றும் availability

கேலக்ஸி வாட்ச் 3, 41mm ரூ.29,990 ஆகவும், ப்ளூடூத் மற்றும் 4ஜி வேரியன்ட்களின் விலை ரூ .34,490 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 45 மிமீ வேரியன்ட்டின் விலை ஆகவும், ரூ .32,990 மற்றும் புளூடூத் மற்றும் 4 ஜி வகைகளுக்கு ரூ .38,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 41 மிமீ வேரியண்ட் Mystic Bronze மற்றும் Mystic Silver வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கும், அதே நேரத்தில் 45mm variant மிஸ்டிக் சில்வர் மற்றும் மிஸ்டிக் பிளாக் வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கும்.

சாம்சங் தனது கேலக்ஸி வாட்ச் 3 ஐ ஆகஸ்ட் 27 ஆம் தேதி சில்லறை விற்பனை கடைகள், சாம்சங் ஓபரா ஹவுஸ், சாம்சங்.காம் மற்றும் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்கள் வழியாக விற்பனை செய்யத் தொடங்கும்.

ஐபோன், வாட்ச் அறிமுகம்… ஆப்பிள் ரசிகர்கள் கொண்டாடத் தயாரா?

ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை சாம்சங் ஷாப் மற்றும் ஆஃப் லைன் சில்லறை கடைகள் வழியாக வாட்சின் 4 ஜி வேரியண்ட்டை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி பட்ஸ் லைவை ரூ .4,990 க்கு பெறலாம். புளூடூத் வேரியண்ட்டை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ .5 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக்கிற்கு தகுதி பெறுவார்கள். இந்த சலுகை ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 26 வரை சாம்சங் ஷாப்ஸ், அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் செய்யப்படும் ஆன்லைன் முன்பதிவுகளுக்கு பிரத்யேகமான வாய்ப்பாகும்.

கேலக்ஸி பட்ஸ் லைவ்: இந்தியா விலை மற்றும் கிடைக்கும் தன்மை

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் இயர்பட் விலை ரூ .14,990 மற்றும் ஆகஸ்ட் 25 முதல் சில்லறை கடைகள், சாம்சங் ஓபரா ஹவுஸ், சாம்சங்.காம் மற்றும் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்களில் கிடைக்கும். அவை மிஸ்டிக் வெண்கலம், மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் ஒயிட் கலர் விருப்பங்களில் வரும்.

கேலக்ஸி வாட்ச் 3: விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3, 41mm வேரியண்டில் 1.2 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே மற்றும் 45 மிமீ வேரியண்டில் 1.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இரண்டு வகைகளும் கார்னிங் கொரில்லா கிளாஸ் டிஎக்ஸ் பாதுகாப்புடன் வருகின்றன. இது Mali-டி 720 GPU கொண்டுள்ளது. நிறுவனத்தின் சொந்த டூயல் கோர் எக்ஸினோஸ் 9110 processor மூலம் இயக்கப்படுகிறது. அவை 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி storage ஆப்ஷனுடன் வருகின்றன. இந்த கடிகாரத்தில் ஐபி 68 நீர் எதிர்ப்பு மற்றும் எம்ஐஎல்-எஸ்டிடி -810 ஜி இணக்க வடிவமைப்பு உள்ளது.

இந்த watch சாம்சங்கின் சொந்த Tizen-based Wearable OS 5.5 கொண்டு இயக்குகிறது. 41mm variant-ஐ 247 எம்ஏஎச் பேட்டரி சப்போர்ட் செய்கிறது மற்றும் 45mm variant-ஐ 340 எம்ஏஎச் பேட்டரி சப்போர்ட் செய்கிறது.

LTEன் இரு வகைகளும் 4 ஜி இணைப்பை இயக்குவதற்கு eSIM ஆதரவுடன் வருகின்றன. இரத்த ஆக்ஸிஜன் (SpO2) சென்சார், ஜி.பி.எஸ் இணைப்பு, இரத்த அழுத்தம் (பிபி) கண்காணிப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈ.சி.ஜி) போன்ற சிறப்பம்சங்களும் உள்ளன.

கடிகாரத்தில் வலது பக்கத்தில் இரண்டு பட்டன்கள் உள்ளன, இதில் physical rotating bezel வசதியும் உள்ளது.

கேலக்ஸி பட்ஸ் லைவ் அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் தனது ஒவ்வொரு bud-ல் மூன்று மைக்ரோஃபோன்களைக் கொண்டுள்ளன. பட்ஸ் லைவ் ஒரு ஐபிஎக்ஸ் 2 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது மற்றும் நிறுவனத்தின் சொந்த  Bixby voice assistant-ஐ ஆதரிக்கிறது. IOS க்கான சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பயன்பாட்டையும், Android க்கான கேலக்ஸி apps பயன்படுத்தி தனிப்பயனாக்க உங்கள் ஸ்மார்ட்போனுடன் இதை இணைக்க முடியும்.

buds ஒவ்வொன்றும் 60 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளன, அதேசமயம் சார்ஜிங் பெட்டியில் 472 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. ஒருமுறை முழு சார்ஜ் செய்தால், 8 மணி நேரம் பயன்படுத்தலாம். சார்ஜிங் செய்தால், பேட்டரி ஆயுள் 29 மணிநேரம் வரை நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Samsung galaxy watch 3 galaxy buds india price and specifications

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X