Samsung Tamil News: கடந்த ஆண்டின் Galaxy Fold-ன் தொடர்ச்சி, ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடக்கவுள்ள சாம்சங்கின் “Galaxy Unpacked” நிகழ்வின் போது வெளியிடப்படலாம் என ஞாயிற்றுக்கிழமை, "One fold, infinite possibilities” என்று சாம்சங் ட்வீட் செய்துள்ளது. ஆகஸ்ட் 5, 2020 அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
Advertisment
சாம்சங் கைபேசியின் பெயரை வெளியிடவில்லை என்றாலும், “fold” பற்றிய குறிப்பு, கேலக்ஸி fold 2 இன் வருகையை உறுதிப்படுத்துகிறது. பிளஸ், வீடியோவில் உள்ள பட்டாம்பூச்சி வடிவ படம் அசல் கேலக்ஸி fold-ஐ நினைவூட்டுகிறது - ஸ்மார்ட்போனின் மடிக்கக்கூடிய தன்மையை சித்தரிக்க சாம்சங் ஒரு பட்டாம்பூச்சி மாடலைப் பயன்படுத்தியது.
கேலக்ஸி Fold 2 இன் அடுத்தக்கட்ட மாடல் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது, இது நிறைய வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. கேலக்ஸி Fold 2 இன் வெளிப்புற display 6.23-இன்ச். எஸ் 20 அல்ட்ராவைப் போலவே 120 ஹெர்ட்ஸ் ரேட் கொண்ட இன்டெர்னல் டிஸ்பிளே 7.59 இன்ச்கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 865,12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை உள் சேமிப்புடன் செயல்படும்.
சாம்சங்கின் ட்வீட், எக்ஸ்.டி.ஏ டெவலப்பரின், மேக்ஸ் வெயின்பாக் கேலக்ஸி இசட் Fold 2 அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும் என்று ட்வீட் வெளியான சில நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. எனினும், சாம்சங்கின் ஆகஸ்ட் 5 “Galaxy Unpacked” நிகழ்வின் போது கேலக்ஸி இசட் Fold 2 அறிமுகப்படுத்தப்படாது என்று வெயின்பாக் கூறினார், ஏனெனில் Fold செய்யக் கூடிய தொலைபேசியின் மென்பொருள் இறுதி செய்ய குறைந்தபட்சம் 2 மாதங்கள் ஆகும்.
Fold செய்யக் கூடிய தொலைபேசி தயாரிப்புகளில் சவால்விடும் சில தொலைபேசி நிறுவனங்களில் தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமும் ஒன்றாகும். அசல் கேலக்ஸி Fold-ல் பல வடிவமைப்பு குறைபாடுகள் இருந்தன. இது சாம்சங் அதன் வெளியீட்டை பல மாதங்கள் தாமதப்படுத்த கட்டாயப்படுத்தியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் என்ற ஃபிளிப்-ஸ்டைல் மடிக்கக்கூடிய தொலைபேசியை அறிமுகப்படுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil