Samsung Tamil News, Samsung M51 price in india: சாம்சங் வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன், செப்டம்பர் 10ம் தேதி நடைபெற உள்ள ஆன்லைன் நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜெர்மனியில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில். அதே வெர்சன் போனே, இந்தியாவிலும் அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisment
Samsung M51 price in india: சாம்சங் கேலக்ஸி எம்51 விலை
தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனம், இந்தியாவில் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. சாம்சங் நிறுவனம், இந்தியாவில் சமீபத்தில் கேலக்ஸி எம் 31 எஸ் போனை அறிமுகப்படுத்தியிருந்தது. ரூ.20 ஆயிரம் விலை கொண்டதான அந்த போன், ரெட்மீ 9 புரோ, ரியல்மீ 6 புரோ உள்ளிட்ட போன்களுக்கு கடும்போட்டியாக அமைந்துள்ளது.
Advertisment
Advertisements
விரைவில் அறிமுகமாக உள்ள சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் நோர்ட், ரியல்மீ எக்ஸ்3, ரெட்மீ கே20 புரோ உள்ளிட்ட போன்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன வசதிகளை இதில் எதிர்பார்க்கலாம்?
சாம்சங் கேலக்ஸி எம் 51குளோபல் வெர்சனே, இந்தியாவில் அறிமுகம் ஆக உள்ளது. சாம்சங் நிறுவனம். இதுவரை 6 ஆயிரம் மெகாஹெர்ட்ஸ் அளவிலா பேட்டரியே வெளிவிட்டிருந்த நிலையில், இந்த போன் 7 ஆயிரம் மெகாஹெர்ட்ஸ் பேட்டரி கொண்டதாக உள்ளது. பெரிய திரை, திறன்மிகு புராசசர், அட்வான்ஸ்டு கேமரா உள்ளிட்ட வசதிகள் இதில் இருக்க வாய்ப்புண்டு.
6.7 இஞ்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் பிளஸ் இன்பினிட்டி ஓ டிஸ்பிளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் புராசசர், 6 ஜிபி ராம், 128 இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.
போனின் பின்பக்கத்தில் குவாட் கேமராவும், முன்பக்கத்தில் இமேஜ் சென்சாரும் உள்ளது. 64 எம்பி பிரைமரி சென்சார், 12 எம்பி செகண்டரி சென்சார், 5எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 5 எம்பி மேக்ரோ லென்ஸ் உள்ளது. செல்பி பிரியர்களுக்காக 32 எம்பி முன்பக்க கேமரா உள்ளது.
ஆண்ட்ராய்ட் 10 ஆபரேடிங் சிஸ்டமும், ஒன் யுஐ சாப்ட்வேரும் உள்ளது.
விலை என்ன?
ஜெர்மனியில், சாம்சங் கேலக்ஸி எம்51 விலை இந்திய மதிப்பில் ரூ .31,600 ஆக உள்ள நிலையில், இந்தியாவில் இதன் விலை ரூ. 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் போன் வெளியாக உள்ளது.
எப்படி வாங்கலாம்
சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனை, அமேசான் இணையதள வாயிலாக வாங்கலாம், இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.இதுமட்டுமல்லாது, சாம்சங் இ- ஸ்டோர்களிலும் வாங்கலாம். ஆப்லைன் முறையில் வாங்க விரைவில் வழிவகை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil