/tamil-ie/media/media_files/uploads/2019/10/1-horz-2.jpg)
Samsung teases clamshell-style foldable phone
Samsung teases clamshell-style foldable phone : சாம்சங் நிறுவனம் உலகின் முதல் ஃபோல்டபிள் போனான கேலக்ஸி ஃபோல்டினை அறிமுகம் செய்து விற்பனையிலும் பெரிய அளவில் அசத்தி வருகின்றது. தற்போது சாம்சங் நிறுவனம் புதிய ஃபோல்டபிள் போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அதன் டீசரை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. காம்ஷெல் என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த ஸ்மார்ட்போனை பக்கவாட்டில் மடிப்பது போன்றே மேலும் கீழும் மடித்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
Samsung teases clamshell-style foldable phone
இந்த டீசரை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போய் உள்ளனர். டீசரை மட்டும் தான் வெளியிடப்பட்டுள்ளதே தவிர அந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த எந்த தகவல்களையும் இது வரை வெளியிடவில்லை இந்நிறுவனம்.
இந்த டீசர் கலிஃபோர்னியாவின் சான் ஜோஸில் நடைபெற்று வரும் சாம்சங்க் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் (l Samsung Developer Conference (SDC)) வெளியிடப்பட்டது. ஸ்மார்ட்போன்களின் சந்தையில் தொடர் சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் சாம்சங் ஃபோல்டபிள் போன்கள் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : இவ்வளவு குறைவான விலையில் 50 இன்ச் டிவியை அறிமுகம் செய்கிறதா சியோமி?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.