ஃபோன் பிரியர்களின் கவனத்திற்கு…. சாம்சங் கேலக்ஸி எஸ்9 வெளியீட்டு தேதி அறிவிப்பு

பலரின் எதிர்பார்ப்பையும் பெற்ற சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் மாடலின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Budget phones for Diwali 2018
Budget phones for Diwali 2018

பலரின் எதிர்பார்ப்பையும் பெற்ற சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் மாடலின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 25-ம் தேதி வெளியாகும் என்று இணையத்தில் தகவல்கள் பரவின. அதனுடன், இந்த மொபைலில் இடம்பெற்றிருக்கும் கேமரா மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து பல்வேறு தகவல்களும் பரவின. இந்நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் அறிமுக விழாவிற்கான அழைப்பிதழ்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மாடலை குறிக்கும் வகையில் 9 என்ற வடிவத்தில் அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சாம்சங் நிறுனத்தின் சார்பில் நடத்தப்படும் எம்டபிள்யூசி 2018 நிகழ்ச்சியில் பிப்ரவரி 25 ஆம் தேதி, அந்நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 + ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவது உறுதியாகிவிட்டது. மேலும், வெளியான அழைப்பிதழில் எஸ்9 ஸ்மார்ட்போன்களின் கேமரா அம்சம் குறித்த விவரங்கள் தெளிவாக இடம்பெற்றுள்ளன. இந்த செய்தியை கேட்ட மொபைல் பிரியர்களிடம் எஸ்9 ஸ்மார்ட்போன் குறித்த எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Samsung to unveil next flagship device galaxy s9 on february 25 read more at economictimes indiatimes comarticleshow62662871 cmsutm_sourcecontentofinterestutm_mediumtextutm_campaigncpps

Next Story
ஜியோவின் அதிரடியான ரூ.49 ப்ளான்!jio phone all in one monthly plans tariff details - ஜியோ வழங்கும் 'ஆல் இன் ஒன்' திட்டங்கள் - இவ்வளவு கம்மியாவா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com