Samsung Triple Camera Phone: மொபைல் பிரியர்களிடம் அதிகப்படியான கவனத்தை பெற்றுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ7 மாடல் ஃபோனின் சிறப்பே அந்த 3 பக்க கேமராவில் தான் அடங்கியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ7 வகை ஸ்மார்ட்போன்கள் கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகின. இந்த ஃபோனின் முக்கிய சிறப்பம்சம் , பின்புறத்தில் இருக்கும் மூன்று கேமராக்கள் .
இந்திய சந்தையில் இதுபோல் மூன்று கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளியானது இதுவே முதல் முறையாகும்.
Samsung Triple Camera Phone: கேலக்ஸி ஏ7 போன்களை கட்டாயம் இதற்காக வாங்க வேண்டும்!
1. வடிவமைப்பு:
சாம்சங் கேலக்ஸி ஏ7 போன்கள் கிளாஸ் பேக் டிஸைனில் புளு, பிளாக், கோல்டு ஆகிய நிறங்களில் கண்களை கவருகின்றன. 6 இன்ஞ்ச் டிஸ்பிளே தோற்றத்துடன் பிரமிப்பை ஊட்டுகிறது.
2. கேமரா:
முதல்முறை 3 கேமராவுடன் வெளிவந்த ஸ்மார்ட்ஃபோன். மெயின் கேமராவில் 24 எம்.பி. மெகா பிக்சல், இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரைமரி கேமராவில் தலா எட்டு எம்.பி. மெகா பிக்சல் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி கேமாரவில் 24 எம்.பி. மெகா பிக்சல் உள்ளது. மேலும், எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.
3. தொழில்நுட்பம்:
சூப்பர் AMOLED ஸ்கிரீன், கைரேகை சென்சார் மற்றும் டால்பி atmos அதிவேக ஒலி தொழில்நுட்பங்களை கொண்டது.2.2 GHz ஆக்டா கோர் ஏகசினோஸ் அல்லது ஸ்னாப் டிராகன் சிப்செட் . ஆண்டிராய்டு 8.1 ஓரியோவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
4. விலை:
சாம்சங் கேலக்ஸி ஏ7 போன்கள் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல்களில் கிடைகிறது. இந்த மாடல்களின் விலை குறைந்த பட்சமாக 23 ஆயிரத்து 990 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 28 ஆயிரத்து 990 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.