கீழே விழுந்தாலும் உடையாது, 7 வருட ஓ.எஸ். அப்டேட்... ராணுவத் தர பாதுகாப்பு கொண்ட புதிய சாம்சங் டேப்லெட்!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 5 என்ற புதிய டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ராணுவத் தர பாதுகாப்பைக் கொண்டது. மேலும், நீர் மற்றும் தூசு புகாத வகையிலும் (IP68), கீழே விழுந்தால் உடையாத வகையிலும் (MIL-STD-810H) வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 5 என்ற புதிய டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ராணுவத் தர பாதுகாப்பைக் கொண்டது. மேலும், நீர் மற்றும் தூசு புகாத வகையிலும் (IP68), கீழே விழுந்தால் உடையாத வகையிலும் (MIL-STD-810H) வடிவமைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Galaxy Tab Active 5

கீழே விழுந்தாலும் உடையாது! ராணுவத் தர பாதுகாப்பைக் கொண்ட புதிய சாம்சங் டேப்லெட்!

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி டேப் ஆக்டிவ் 5 ரக்டு (rugged) டேப்லெட்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ராணுவத் தர சான்றிதழ் மற்றும் எஸ் பென் (S Pen) ஆதரவுடன் வருகிறது. கடினமான சூழலில் பணியாற்றும் வல்லுநர்களுக்குத் தொடர்ச்சியான மற்றும் பயனுள்ள உற்பத்தித் திறனை இது வழங்குகிறது.

சிறப்பம்சங்கள் 

Advertisment

ராணுவத் தர வடிவமைப்பு: இந்த டேப்லெட் MIL-STD-810H சான்றிதழ் பெற்றது. இது நீர், தூசுக்கு எதிராக IP68 சான்றிதழ் கொண்டது. இதன் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்புடன் வருகிறது. சத்தமான 2 ஸ்பீக்கர்கள், ப்ரோக்ராம் செய்யக்கூடிய பட்டன்கள், கையுறை அணிந்திருக்கும் போதும் பயன்படுத்தக்கூடிய தொடுதிரை போன்ற அம்சங்கள் களப்பணி மற்றும் பணி தளங்களுக்கு ஏற்றதாக அமைகின்றன.

எண்டர்பிரைஸ் எடிஷன்: இந்த டேப்லெட்டின் எண்டர்பிரைஸ் எடிஷனில், நாக்ஸ் சூட் எண்டர்பிரைஸ் செக்யூரிட்டி பிளாட்ஃபார்ம் (Knox Suite Enterprise Security Platform) சந்தாவுடன் வருகிறது. இதன் மதிப்பு ரூ.4,515 ஆகும். கேலக்ஸி டேப் ஆக்டிவ் 5-ன் விலை ரூ.49,999 இல் தொடங்குகிறது. இது தற்போது Samsung.com இணையதளத்தில் முன்பதிவுக்குக் கிடைக்கிறது.

இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 15 உடன் வருகிறது. மேலும், அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்கிரேடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சாம்சங் இந்த டேப்லெட்டுக்கு 36 மாத வாரண்டி (பேட்டரிக்கு 12 மாதங்கள்) வழங்குகிறது. இந்த பிரிவில் 36 மாத வாரண்டி வழங்குவது மிக குறைவான நிறுவனங்களே. விரைவில், கூடுதல் வாரண்டி மற்றும் ADLD திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும்.

Advertisment
Advertisements

"இந்தியாவில் பிறந்து, இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகளால் ஒவ்வொரு அடியும் உந்தப்படுகிறது" என்று சாம்சங் இந்தியாவின் எண்டர்பிரைஸ் பிசினஸ் துணைத் தலைவர் புனீத் சேத்தி கூறினார். மேலும், "இது வெறும் உற்பத்தி மட்டுமல்ல; இந்தியாவின் மொழியைப் பேசும் தொழில்நுட்பத்தை வடிவமைப்பதற்கான எங்கள் உறுதிமொழி" என்றும் அவர் தெரிவித்தார்.

Samsung

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: