நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) 2018-ல் சனி தனது வளையங்களை (Rings) வேகமாக இழந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்தியது. கிரகத்தின் ஈர்ப்பு வளையங்களில் இருந்து போதுமான பனியை இழுத்து, அரை மணி நேரத்தில் ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளத்தை நிரப்புகிறது. வளையங்கள் முற்றிலும் மறைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்றாலும், அவை விரைவில் இந்தாண்டில் பூமியில் இருந்து நமது கண்களுக்குத் தெரியாமல் போகும் என்றும் கூறியுள்ளனர்.
ஆப்டிக்கல் இல்யூசன் (ஒரு ஒளியியல் மாயை)
1610-ம் ஆண்டு கலிலியோ தனது 20x தொலைநோக்கியை வானத்தில் திருப்பிய போது சனி கிரகனத்தின் அழகிய வளையங்களை முதல் முதலாக கண்டுபிடித்தார். ரோமானிய விவசாயக் கடவுளின் பெயர் தான் சனி கிரகத்திற்கு வைக்கப்பட்டது.
இப்போது வேண்டுமானாலும் basic astronomy கருவிகளைக் கொண்ட எவரும், அதை வானத்தை நோக்கித் திருப்பி அழகிய வளையங்களை காண முடியும். வளையங்கள் பில்லியன் கணக்கான சிறிய பனிக்கட்டிகள் மற்றும் பாறைகளால் ஆனது.
ஆனால் 2025-ம் ஆண்டிற்கு முன்பாகவே, சனி நமது கிரகத்துடன் விளிம்பில் இணையும் என்று Earth.com தெரிவித்துள்ளது.
உண்மையில் எப்போது மறையும்?
புவியீர்ப்பு விசையின் காரணமாக பூமியில் விழும் வளையப் பொருட்களின் அளவைக் கொண்டு, நாசா விஞ்ஞானிகள் அந்த வளையங்கள் 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் குறைவாகவே வாழ்கின்றன என்று மதிப்பிடுகின்றனர்.
சனியின் வயது கிட்டத்தட்ட 4 பில்லியன் ஆண்டுகள் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்கும் வரை அது நீண்ட காலமாகத் தோன்றலாம். இந்த வளையங்கள் முதலில் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்க வாய்ப்பில்லை என்று அறிவியல் ஒருமித்த கருத்து கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“