இனி யாரும் ஏமாற்ற முடியாது… WhatsApp-ல் முக்கிய மெசேஜ்களை சேவ் செய்வது எப்படி?

save important messages, chats on WhatsApp : வாட்ஸ் அப் செயலியில் முக்கிய மெசேஜ்களை சேவ் செய்து வைக்கும் வசதி

Diwali WhatsApp messages, quotes, Diwali WhatsApp stickers
Diwali WhatsApp messages, quotes, Diwali WhatsApp stickers

Save Important chats on WhatsApp : உலகம் முழுவதும் பரவியிருக்கும் பிரபல வாட்ஸ் அப் செயலியில் முக்கிய மெசேஜ்களை சேவ் செய்து வைக்கும் வசதி கொண்டுவரப்பட்டது அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்றைய தலைமுறை மட்டுமின்றி கடந்த தலைமுறையும், அடுத்த தலைமுறைகளும், சமூக வலைத்தளத்தின் பின்னால் மந்திரம் போட்டது போல ஓடிக்கொண்டிருக்கின்றனர். காலை எழுந்து பல் துலக்குவது முதல் இரவு குரட்டை விட்டு தூக்கும் வரை ஓயாமல் செல்போனில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

Save Important chats on WhatsApp : முக்கிய மெசேஜ்களை வாட்ஸ் அப்பில் சேவ் செய்வது எப்படி?

அதிலும் இன்றைய காலத்தில் வாட்ஸ் அப் இல்லாத நாளே பொதுமக்கள் வாழ்வில் கிடையாது. சாதாரண மெசேஜ் செயலியாக மட்டும் 2010 ஆண்டு அறிமுகமான இது, குரூப் வீடியோ கால் வரை வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது கூடுதல் வளர்ச்சியாக முக்கிய மெசேஜ்களை சேவ் செய்து வைக்கும் முறையும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதை செய்வதும் மிகவும் சுலபம் :

1) சேட்களை பின் செய்து வைக்கலாம்

  • வாட்ஸ் அப் செயலியை ஓபன் செய்யவும்.
  • அதில் எதாவது ஒரு முக்கிய மெசேஜை நீண்ட நேரம் அழுத்தி பிடித்தால், அது க்ளிக் ஆகும்.
  • மேலே நான்கு ஆப்ஷன்கள் தெரியும் – பின், டெலீட், மியூட், ஆர்கைவ் மற்றும் புள்ளிகள் இருக்கும் அடையாளம்.
  • அதில் பின் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
  • இதன் மூலம் அந்த சேட்களின் முதல் மெசேஜாக இது மட்டுமே இருக்கும். ஒருவேளை பழைய பின் மெசேஜை நீக்க வேண்டுமென்றால், அந்த மெசேஜை அழுத்தி பிடித்து, டிஸ் ஏபில் என்று கொடுக்கவும்.

2) ஸ்டார் செய்யும் முறை:

  • குறிப்பிட்ட நபரின் மெசேஜை சேவ் செய்து வைக்க ஸ்டார் முறையை பயன்படுத்தலாம்
  • அந்த மெசேஜை நீண்ட நேரம் அழுத்தவும்
  • உடனே 5 ஐக்கான் தோன்றும். அதில் ஸ்டார் பட்டனை தேர்வு செய்யவும்.
  • இதன் மூலம் முக்கிய மெசேஜ்கள் சேவ் செய்யலாம்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Save important messages chats whatsapp

Next Story
சாம்சங் ஏ சீரியஸ்ஸில் வெளியாகும் மூன்று புதிய போன்கள்!Samsung Galaxy Note 10 Pro
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express