scorecardresearch

ATM பின் நம்பர் மறந்துவிட்டதா? SBI சிம்பிள் ஸ்டெப்ஸ்

Banking news in Tamil, SBI Introduce green PIN facility to their customers: வங்கிக்கு செல்லாமலே உங்களது பழைய ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை (PIN Number) மாற்றும் அல்லது புதிய ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை உருவாக்கும் கிரீன் பின் வசதியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி எளிமையானது மற்றும் பாதுகாப்பானது. இதனை எஸ்எம்எஸ், இணைய வழி, ஏடிஎம் அல்லது வாடிக்கையாளர் சேவை போன்ற ஏதேனும் ஒரு வழியாக செய்யலாம்.

sbi pension seva

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  வங்கிக்கு செல்லாமலே உங்களது பழைய ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை (PIN Number) மாற்றும் அல்லது புதிய ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை உருவாக்கும் கிரீன் பின் வசதியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி  எளிமையானது மற்றும் பாதுகாப்பானது. இதனை எஸ்எம்எஸ், இணைய வழி, ஏடிஎம் அல்லது வாடிக்கையாளர் சேவை போன்ற ஏதேனும் ஒரு வழியாக செய்யலாம்.

எஸ்எம்எஸ் வழியாக உருவாக்குதல்

வங்கியில் பதிவுசெய்யப்பட்ட உங்களது தொலைப்பேசி எண்ணிலிருந்து PIN< உங்கள் ஏடிஎம்  அட்டையின் கடைசி 4 இலக்க எண்கள்>< உங்கள் வங்கி  கணக்கின் கடைசி 4 இலக்க எண்கள் > என்று டைப் செய்து 567676 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

இப்பொழுது உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் ஒடிபி எனப்படும் ஒருமுறைக்கான ரகசிய எண் இருக்கும். இதனை இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

எனவே, அருகிலுள்ள எஸ்பிஐ  ஏடிஎம்க்கு சென்று உங்களது ரகசிய எண்ணை மாற்றிக்கொள்ளலாம்.

இவ்வழி முறையை பழைய மற்றும் புதிய எஸ்பிஐ  ஏடிஎம் அட்டைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

எஸ்பிஐ  ஏடிஎம் வழியாக உருவாக்குதல்

அருகிலுள்ள எஸ்பிஐ  ஏடிஎம்க்கு சென்று, உங்களது அட்டை ஏடிஎம் அட்டையை ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்தி பின் உருவாக்கம் (Generation) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இப்பொழுது உங்களது பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணை பதிவிடவும், பின்பு உங்களது வங்கி கணக்கு எண்ணை பதிவிடவும்.

 இப்பொழுது உங்களது பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஒடிபி வரும், அதனை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவிட்டு, பின்பு உங்களது புதிய ரகசிய எண்ணை உருவாக்கி கொள்ளலாம்.

இணைய வழியாக உருவாக்குதல்                                

ஏடிஎம்க்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே இணைய வழியில் உங்கள் ரகசிய எண்ணை மாற்றிக்கொள்ளலாம்.

www.onlinesbi.com என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களது உள்ளீட்டு எண் அல்லது சொல் (User ID) மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள் நுழையவும். இ-சர்வீசஸ் என்ற பகுதியில் ஏடிஎம் கார்டு சர்வீசஸை தேர்ந்தெடுக்கவும்.

இதில் ஏடிஎம் பின் ஜென்ரேசன்ஐ தெரிவு செய்யவும். இப்பொழுது உங்கள் முன் ஒடிபி அல்லது பரிவர்த்தனை கடவுச்சொல் (Profile Password) என்ற இரண்டு தெரிவுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து ரகசிய எண்ணை உருவாக்கவும்.     இப்பொழுது உங்களது பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஒடிபி வரும். அதனை இணையதளத்தில் பதிவிட்டு சேமிப்பு கணக்குஐ தேர்ந்தெடுத்து தொடரவும்.

ஏடிஎம் கார்ட் என்பதை தெரிவு செய்து உங்கள் ரகசிய எண்ணின் முதல் இரண்டு இலக்கத்தை உள்ளிடவும். கடைசி இரண்டு இலக்கங்கள்  உங்களது பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியாக வரும். இப்பொழுது அந்த நான்கு இலக்க ரகசிய எண்ணை பதிவிட்டு சமர்ப்பி (Submit)ஐ அழுத்தவும்.

இப்பொழுது உங்கள் ஏடிஎம் அட்டையின் ரகசிய எண் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.

வாடிக்கையாளர் சேவை வழியாக உருவாக்குதல்

உங்களது பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணிலிருந்து 1800 112 211 அல்லது 1800 425 3800 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கவும்.

தொடர்பு கிடைத்தவுடன் உங்கள் மொழியை தேர்ந்தேடுக்கவும். ஏடிஎம் கார்டு சேவைகளுக்கு எண் 2ஐ அழுத்தவும். ரகசிய எண் உருவாக்கத்திற்கு எண் 1ஐ அழுத்தவும்.

நீங்கள், உங்களது பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணிலிருந்துதான் அழைக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய மீண்டும் 1ஐ அழுத்தவும். அல்லது 2ஐ அழுத்தி வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் பேசவும். உங்களுக்கு ஒரு தற்காலிக ரகசிய எண் தொலைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வரும். அதனை ஏடிஎம் சென்டர் சென்று மாற்றிக்கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Sbi introduce green pin facility to their customers