வங்கி கணக்கு எண்ணுடன் மொபைல் எண் இணைப்பது அவசியம். ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பது, செலுத்துவது மற்ற இதர வங்கி தொடர்பான தகவல்கள் பெற வங்கி கணக்கு எண்ணுடன் மொபைல் எண் இணைப்பது மிகவும் அவசியமாகிறது. வங்கி தொடர்பான எந்த தகவலாக இருந்தாலும் அது நீங்கள் உங்கள் மொபைல் எண்ணில் பெறலாம். இந்நிலையில் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் என்றால் அதையும் எளிதாக செய்யலாம்.
எஸ்.பி.ஐ பயனர்கள் இன்டர்நெட் பேங்கிங், ஏ.டி.எம் மூலம் மொபைல் எண் மாற்றும் வசதி உள்ளது. அதில் எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம்.
எஸ்.பி.ஐ நெட் பேங்கிங் மூலம் மொபைல் எண் மாற்றுவது எப்படி?
1. முதலில் எஸ்.பி.ஐ-ன் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு www.onlinesbi.com-க்கு செல்ல வேண்டும்.
2. அடுத்து வலப் பக்கத்தில் உள்ள பேனலில் "My Accounts" செக்ஷன் செலக்ட் செய்து Profile-Personal Details-Change mobile No என்று கொடுக்கவும்.
3. இப்போது வங்கி அக்கவுண்ட் நம்பர் மற்றும் புதிய மொபைல் எண்ணை பதிவிடவும்.
4. அடுத்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணின் இறுதி இரண்டு (திருத்த முடியாத) இலக்கங்கள் காண்பிக்கப்படும்.
5. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் மேப்பிங் நிலையை வங்கி உங்களுக்குத் தெரிவிக்கும்.
எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மூலம் மொபைல் எண் மாற்றுவது எப்படி?
- உங்கள் அருகில் உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையத்தில செல்லவும்.
2. ஏ.டி.எம் மெஷினில் Register ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3. உங்கள் ஏ.டி.எம் பின் நம்பரை குறிப்பிடவும்.
4. அடுத்து 'Mobile Number Registration' என்பதை தேர்ந்தெடுக்கவும்.
5. இப்போது Change Mobile Number என்பதை கொடுக்கவும்.
6. இங்கு உங்களுடைய பழைய மொபைல் எண் என்டர் செய்யப் பட வேண்டும். அதுசரிபார்க்கப்படும்.
7. புதிய மற்றும் பழைய எண்கள் இரண்டிற்கும் ஓ.டி.பி அனுப்பபடும்.
8. ஓ.டி.பி என்டர் செய்யப்பட்ட உடன் உங்கள் புதிய மொபைல் எண் அப்டேட் செய்யப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“