/indian-express-tamil/media/media_files/2025/06/01/9b38I3GdyJAfE0g4fOsI.jpg)
விண்வெளியில் இருந்துவரும் விசித்திரமான ரேடியோ அலைகள்: விஞ்ஞானிகள் குழப்பம்!
ஆஸ்திரேலியாவில் உள்ள வானியலாளர்கள் குழு, பால்வீதியின் மையத்திலிருந்துவரும் சில விசித்திரமான ரேடியோ சிக்னல்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த “நீண்ட கால ரேடியோ டிரான்சிண்ட்கள்” அல்லது LPTகள், X-ray pulses-ஐ அனுப்புகின்றன. இது இதுவரை பதிவான விசித்திரமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.
பூமியிலிருந்து சுமார் 15,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் பால்வீதியில் அமைந்துள்ள ASKAP J1832-0911 என்ற இந்த மர்மப் பொருள், ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கும், 2 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக ரேடியோ அலைகள் மற்றும் எக்ஸ்-கதிர்களை அனுப்புகிறது தெரியவந்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Australian Square கிலோமீட்டர் Array Pathfinder தொலைநோக்கி (ASKAP) கைப்பற்றிய தரவுகளில் Curtin பல்கலைக்கழக வானியலாளர் Ziteng Andy Wang தலைமையிலான சர்வதேச குழு முதன்முதலில் ஒரு ரேடியோ சிக்னலைக் கண்டறிந்துள்ளது.
ரேடியோ அலைகள் தோன்றும் அதே நேரத்தில் X-ray pulses-உம் ஏற்படுவதைக் கண்டபோது தான் “மிகவும் ஆச்சரியப்பட்டேன்” என்றும், “இது ஒரு பெரிய கண்டுபிடிப்பு” என்றும் டாக்டர் Wang கூறுகிறார். எதுவாக இருந்தாலும், அந்தப் பொருள் மிகவும் வலுவான காந்தப்புலத்தை கொண்டு உள்ளது, இது பூமியை விட பில்லியன் மடங்கு வலிமையானது என்று மெக்குவாரி பல்கலை. வானியலாளர் ஸ்டூவர்ட் ரைடர் கூறினார்.
நாசாவின் சந்திரா எக்ஸ்ரே தொலைநோக்கியால் முதலில் கண்டறியப்பட்ட ASKAP J1832-0911, நீண்ட கால ரேடியோ டிரான்சிண்ட்கள் எனப்படுகிறது. இவை 10 நிமிடங்கள் வரை தீவிரமான ரேடியோ அலைகளை வெளியிடும். இந்த அலை நியூட்ரான் நட்சத்திரங்களில் காணப்படும் தொடர்ச்சியான மாறுபாடுகளின் நீளத்தை விட ஆயிரக்கணக்கான மடங்கு நீளமானவை என்று நாசா கூறுகிறது.
இருப்பினும், ASKAP J1832-0911 இறந்த நட்சத்திரம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது என்ன வகை என்று தெரியவில்லை. சிலர் இது ஒரு இறந்த நட்சத்திரத்தின் மையமான காந்தமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள், மற்றவர்கள் இது ஒரு ஜோடி நட்சத்திரங்களாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.