இந்த விஞ்ஞானிகள் ஒரு விஸ்கி டிஸ்டில்லரியில் இருந்து வரும் கழிவுநீரைப் பயன்படுத்தி பசுமை ஹைட்ரஜனை, நிலையான எரிபொருளை உருவாக்க பயன்படுத்தியுள்ளனர்.
இது உண்மையில் அதிகமாக குடிப்பதற்கு என்ற காரணத்திற்காக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது, ஆனால், எடின்பரோவில் உள்ள ஹெரியட்-வாட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் விஸ்கி வடித்தல் தொழிலில் இருந்து கழிவுநீரைப் பயன்படுத்தி பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்தனர், இது ஒரு வகை நிலையான எரிபொருளாகும்.
ஆங்கிலத்தில் படிக்க: Scientists create green sustainable fuel from whisky distilling waste
ஒரு புதிய நானோ அளவிலான பொருளை உருவாக்குவதன் மூலம் அவர்கள் இதைச் செய்தார்கள் - ஒரு துகள் மனித முடியின் விட்டத்தில் 10,000-வது மடங்கு. இது பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செயல்பாட்டில் புதிய நீருக்கு பதிலாக டிஸ்டில்லரி கழிவுநீரை பயன்படுத்த அனுமதித்தது. இந்த நானோ துகள்கள் நிக்கல் செலினைடு என்று அழைக்கப்படுகிறது, இது கழிவுநீரை சுத்திகரிக்கும். இது புதிய நீருடன் ஒப்பிடும்போது பசுமை ஹைட்ரஜனை ஒத்த அல்லது சற்று அதிக அளவில் உற்பத்தி செய்தது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு 1 கிலோ பசுமை ஹைட்ரஜனையும் உற்பத்தி செய்ய 9 கிலோ தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கிடையில், ஒவ்வொரு 1 லிட்டர் மால்ட் விஸ்கி உற்பத்தியும் சுமார் 10 லிட்டர் எச்சத்தை உருவாக்குகிறது. பூமியைப் பாதுகாக்க உதவ, புதிய நீர் மற்றும் பிற இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். எனவே, தண்ணீரில் உள்ள கழிவுப்பொருட்களை அகற்றும் எளிய செயல்முறையுடன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு இந்த டிஸ்டில்லரி கழிவுநீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் எங்கள் ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது” என்று ஆய்வு இதழில் பிரசுரிக்கைப்பட்டுள்ள கட்டுரையின் இணை ஆசிரியர் சுதாகர் பிச்சைமுத்து கூறினார்.
புதைபடிவ எரிபொருட்களைப் போல இல்லாமல், ஹைட்ரஜன் எரியும் போது கார்பனை வெளியிடுவதில்லை. பசுமை ஹைட்ரஜன் என்பது புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எரிபொருளைக் குறிக்கிறது. பசுமை ஹைட்ரஜன் பொதுவாக காற்று அல்லது சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தி மின்னாற்பகுப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறை நீர் மூலக்கூறுகளை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிப்பதன் மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்கிறது.
வழக்கமாக, மின்னாற்பகுப்பு அல்லது மின்னாற்பகுப்புகளைச் செய்யும் சாதனங்கள் புதிய நீரில் மட்டுமே செயல்படும். கழிவுநீரில் சேர்க்கப்படும் பொருட்கள் பொதுவாக அவற்றை செயலிழக்கச் செய்கின்றன. ஆனால், நானோ துகள்கள் மூலம் இதை செய்ய முடிந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆராய்ச்சிக் குழு இப்போது தங்கள் சொந்த மின்னாற்பகுப்பு முன்மாதிரியை உருவாக்கி நிக்கல் செலினைடு நானோ துகள்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இந்த குழு, டிஸ்டில்லரி கழிவுநீரை சுத்திகரிப்பு செயல்பாட்டின் போது அதிலிருந்து ஏதாவது மதிப்புள்ள பொருட்களை மீட்க முடியுமா என்பதைக் கண்டுபிடிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“