அபூர்வ உயிரினங்கள் மிகுந்த இந்திய பெருங்கடலில் ஆய்வு: லண்டன் விஞ்ஞானிகள்

கடலில் வெளிச்சம் அரிதாகப்படக்கூடிய, ஆனால் செழிப்பாக உள்ள அதி ஆழமான Mid night zone பகுதியில் மூழ்கி விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

By: Updated: February 10, 2020, 09:39:47 PM

நெக்டன் மிஷன் ப்ளான் என்ற பெயரில் இங்கிலாந்து விஞ்ஞானிகளின் தலைமையிலான குழுவினர், காலநிலை மாற்றத்தால் ஆழ்கடலில் உள்ள உயிரினங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்

கடலில் வெளிச்சம் அரிதாகப்படக்கூடிய, ஆனால் செழிப்பாக உள்ள அதி ஆழமான Mid night zone பகுதியில் மூழ்கி விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். இந்தியப்பெருங்கடலில் இந்த ஆய்வை மேற்கொள்கின்றனர். நெக்டன் மிஷன் ப்ளான் என்ற பெயரில் இங்கிலாந்து விஞ்ஞானிகளின் தலைமையிலான குழுவினர், காலநிலை மாற்றத்தால் ஆழ்கடலில் உள்ள உயிரினங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். ஷேஷல்ஸ் மற்றும் மாலத்தீவு அரசுகளுடன் சேர்ந்து 5 வாரங்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணத்தில் கடல் அடியில் இருந்து ஆயிரம் மீட்டர்கள் உயரமுள்ள மலைப்பாறைகள், ஆழ்கடலில் உள்ள பாறைகளை ஆய்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவ்வளவு கடினமான ஆழத்தில் ஆய்வு செய்வதற்கு உலகின் அதிநவீன ஆழ்கடல் வாகனமான “limiting factor” என்று அழைப்படக்கூடிய நீர்மூழ்கிக்கப்பலை பயன்படுத்த உள்ளார்கள். கடலுக்கு அடியில் ஆயிரம் மீட்டருக்கு கீழே (3,280 அடிக்கு கீழ்) வெளிச்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒளியை வெளியேற்றக்கூடிய நிறைய உயிரினங்கள் உள்ளன. அதன் மூலம் எங்கள் ஆய்வு ஒளிபெறும் என்று நெக்டன் மிஷனின் இயக்குனர் ஆலிவர் ஸ்டீட்ஸ் கூறுகிறார்.

ஆழ்கடலில் சென்று நாங்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ள இந்தியப்பெருங்கடல் பகுதி உலகில் உள்ள கடல் பகுதிகளிலேயே அனைத்து வகையான கடல்சார் உயிரினங்களும் வாழக்கூடிய பகுதி. எனவே நாங்கள் என்ன கண்டுபிடிக்கப்போகிறோம் என்பது இப்போது தெரியாது. என்று ஸ்டீட்ட்ஸ் அண்மையில் கடலில் இறங்குவதற்கு முன் ஸ்பெயினில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த முழுப்பயணம் குறித்தும், ஆசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் பிரத்யேகமாக செய்தி சேகரிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் “limiting factor” ஐந்து பயணங்களை செய்தது. உலகிலேயே ஆழமான 5 கடல் பகுதிகளில் மூழ்கி ஆய்வு செய்தது. 11 ஆயிரம் மீட்டர் (36 ஆயிரம் அடி) ஆழத்தில் ஆய்வு செய்திருந்தனர். அந்த எவெரஸ்ட் சிகரத்தை விட உயரமானது. அவ்வளவு ஆழத்தில் சென்று ஆய்வு செவதற்கு இரண்டு ஆள் அளவு டைட்டானியத்தாலான ஆடையுடன், 96 மணி நேரம் வரை வரக்கூடிய ஆக்ஸிஜன் சிலிண்டரையும் தூக்கிச்செல்ல வேண்டும்.

கடலின் அடியில் 6 ஆயிரம் மீட்டர் (19,685 அடி) செல்லக்கூடிய 5 வாகனங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் ஒன்று மட்டுமே பாதியளவு ஆழம் வரை கொண்டு செல்லும் என்று பயணத்தின் தலைவர் ராப்மெக்கல்லம் கூறினார். எனவே நாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் மிகப்புதுமையான ஒன்றே. இந்த பயணத்தில் நாங்கள் பார்க்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் ஏறத்தாழ புதுமையான கண்டுபிடிப்பாகும்.

ஏற்கனவே கிடைத்த மாதிரிகள், சென்சார் கருவிகள் மற்றும் தொழிநுட்ப வழிகாட்டிகளின் உதவியோடு, விஞ்ஞானிகள் புதிய உயிரினங்கள், புதிய கடலுக்குள் மூழ்கியுள்ள மலைஉச்சிகளை கண்டுபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நெகிழிப்பொருட்களினால் ஏற்பட்டுள்ள மாசுபாடுகள் மற்றும் மனிதன் ஏற்படுத்தியுள்ள மற்ற பிரச்னைகள் குறத்தும் கண்காணிக்க உள்ளோம்.

கடந்த மே மாதத்தில் பசிபிக் பெருங்கடலின் மெரியானா டிரெச் என்ற கடலின் ஆழமான பகுதியில் “limiting factor” இறங்கியபோது, அதன் பைலட் அங்கு ஒரு பிளாஸ்டிக் பையை பார்த்துள்ளார். பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான இடத்தில் 90 சதவீதத்தை கடல் ஆக்கிரமித்துள்ளது என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த கடல் முழுவதும் ஆராய்ந்து அறியப்படாத ஒன்றாக இருக்கிறது என்று சர்வதேசே இயற்கை பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த கடல் வல்லுனர் டான் லாபோலே கூறுகிறார். எனவே பெரிய மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் கடலில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு இந்தியப்பெருங்கடலில் 7 வாரங்கள் நடத்திய பயணத்தில் கண்காணித்த விஷயங்கள், இந்த பயணத்தின்போது அறிந்துகொண்டவை குறத்து 2022ம் ஆண்டு தெரிவிப்பார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Scientists dive into midnight zone to study dark ocean

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X