/indian-express-tamil/media/media_files/GFgeeirCtjj2SiDXZw3m.jpg)
ஆணின் விந்தணுக்களை அல்ட்ராசவுண்டிற்கு உட்படுத்தும் போது அது வேகமாக நகர்ந்து செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. மனித விந்து மாதிரிகளை அல்ட்ரா சோனிக் அலைகளுக்கு உட்படுத்தினர். அதன் பின் "விந்து இயக்க" மாற்றங்களை அவர் அளவிட்டனர்.
ஆண்களுக்கு விந்தணுக்களின் இயக்கம் குறைவதால், பெண்கள் கர்ப்பம் தரிப்பது கடினமாக இருக்கும் என்று கடந்த கால ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. விந்தணுவை விரைவுபடுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளன, ஆனால் அது விந்தணு டி.என்ஏ சேதம் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று இதுபற்றி ஆய்வு நடத்திய மோனாஷ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மகப்பேறு மருத்துவர்கள், நன்கொடையாளரிடமிருந்து விந்தணுக்களை சேகரித்து நேரடியாக கருப்பையில் செலுத்துவதன் மூலம் இந்த சிக்கலைச் சமாளிக்கிறார்கள்.
மோனாஷ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில், விந்தணுக்கள் நகர்வு குறித்து கண்டறிந்தனர். பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் சாதாரண விந்தணு இயக்கம் உள்ள ஆண்கள் மற்றும் விந்தணு இயக்கத்தில் சிக்கல்களை எதிர்க் கொள்கிற ஆண்கள் என இருவரிடமிருந்தும் 50 விந்துகளை சேகரித்தனர். இந்த விந்தணுக்களை தனித்தனியாக வைத்து 800 மெகாவாட் அல்ட்ராசோனிக் அலைகளை 20 வினாடிகளுக்கு வெளிப்படுத்தினர். அல்ட்ராசவுண்ட் செலுத்துவதற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்தனர்.
அல்ட்ராசவுண்ட் செலுத்தப்பட்ட விந்து மாதிரிகள் வியத்தகு இயக்கத்தை வெளிப்படுத்தின. 266 சதவீதம் வேகத்தை வெளிப்படுத்தின. சையாத விந்தணுக்கள் கூட அல்ட்ராசவுண்ட் அலைகளின் டோஸ் மூலம் இயங்கின என்றும் அவர்கள் கண்டறிந்தனர்.
விந்தணுக்களின் மைட்டோகாண்ட்ரியல் ஆற்றல் இல்லாததை அல்ட்ராசவுண்ட் மாற்றியமைக்கும் காரணமாக விந்தணுக்கள் வேகமடைகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஆனால் இது எவ்வளவு தூரம் பாதுகாப்பானது என்று கண்டறிய இன்னும் ஆராய்ச்சிகள் தேவை. அலைகள் விந்தணுக்கள் மற்றும் பெண்ணின் இனப்பெருக்க செல்களை சேதப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய இன்னும் ஆய்வுகள் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.