Advertisment

60 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தோனேசியா மலையில் அரிய விலங்கினம் கண்டுபிடிப்பு

1961-ம் ஆண்டில் டச்சு தாவரவியலாளர் ஒருவரால் இந்த இனம் ஒரு முறை மட்டுமே அறிவியல் ரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Echidna.jpg

Echidna in the Cyclops Mountains, Papua, Indonesia July 22, 2023.

இந்தோனேசியாவின் சைக்ளோப்ஸ் மலைகளில், முள்ளம்பன்றியின் முதுகுத்தண்டுகள், எறும்புப் பன்றியின் மூக்கு மற்றும் மச்சத்தின் பாதங்கள் என விவரிக்கப்பட்டுள்ள நீண்ட காலமாக காணாமல் போயிருந்த பாலூட்டி இனத்தை விஞ்ஞானிகள் மீண்டும் கண்டுபிடித்துள்ளனர். 1961-ம் ஆண்டில் முதல் முதலில் பதிவு செய்யப்பட்டப் பின் 60 ஆண்டுகளுக்குப் பின் பாலூட்டி விலங்கினம் கண்டுபிடிப்பு 

Advertisment

 அட்டன்பரோவின் நீண்ட வாய் கொண்ட எக்கிட்னா, பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோவின் பெயரிடப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான நான்கு வார பயணத்தின் கடைசி நாளில் டிரெயில் கேமரா மூலம் முதல் முறையாக புகைப்படம் எடுக்கப்பட்டது. 

பயணத்தின் முடிவில் மலைகளில் இருந்து இறங்கிய உயிரியலாளர் ஜேம்ஸ் கெம்ப்டன், 80-க்கும் மேற்பட்ட ரிமோட் கேமராக்களில் இருந்து கடைசியாக மீட்டெடுக்கப்பட்ட மெமரி கார்டில் காட்டின் அடிவாரத்தில் நடந்து செல்லும் சிறிய உயிரினத்தின் படங்களைக் கண்டுபிடித்தார்.

இந்தோனேசியப் பாதுகாப்புக் குழுவான YAPPENDA-வின் ஒத்துழைப்பாளர்களுடன் தான் முதன்முதலில் காட்சிகளைப் பார்த்த தருணத்தை விவரிக்கையில், "ஒரு பெரிய பரவச உணர்வு இருந்தது, மேலும் கடைசி நாள் வரை எந்த வெகுமதியும் இல்லாமல் களத்தில் நீண்ட காலம் கழித்த நிம்மதியும் இருந்தது" என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், நான் என் சகாக்களை நோக்கி கத்தினேன். அது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. நாம் அதைக் கண்டுபிடித்து விட்டோம். கண்டுபிடித்து விட்டோம் என்று கத்தினேன். பின் ஹாலில் இருந்த எனது  சகாக்களை கட்டிப்பிடித்தேன்." என்றார். 

அந்த விலங்கினம் எக்கிட்னாஸ் (Echidnas) ஆகும். இது கூச்ச சுபாவமுள்ள, இரவு நேர பர்ரோ-வாசிகள் என்று வர்ணிக்கப்பட்டது, அதனால் இவை கண்டுபிடிக்க கடினமாக உள்ளனர் என்றார். 

"இது மற்ற பாலூட்டிகளைப் போலல்லாமல் வெளியில் தென்படாமல் இருக்க காரணம், இது மோனோட்ரீம்களில் உறுப்பினராக இருப்பதால் - சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாலூட்டி மரத்திலிருந்து பிரிந்த முட்டையிடும் குழு" என்று கெம்ப்டன் கூறினார். 

1961-ல் டச்சு தாவரவியலாளர் ஒருவரால் இந்த இனம் ஒரு முறை மட்டுமே அறிவியல் பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவின் தாழ்நிலம் முழுவதும் வெவ்வேறு எக்கிட்னா இனங்கள் காணப்படுகின்றன.

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/scientists-rediscover-long-lost-mammal-in-remote-indonesia-mountains-9021219/

கெம்ப்டனின் குழு அவர்களின் பயணத்தின் போது நிலநடுக்கம், மலேரியா, அட்டைப் பூச்சி பாதிப்புகளிலிருந்து தப்பித்து ஆய்வை மேற்கொண்டனர். வடகிழக்கு பப்புவாவின் தொலைதூர நிலப்பரப்புக்கு செல்லவும், ஆய்வு செய்யவும் அவர்கள் உள்ளூர் கிராமமான யோங்சு சபாரி மக்களுடன் இணைந்து  பணியாற்றி உள்ளார்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Indonesia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment