Advertisment

அதிரடி காட்டும் எலான் மஸ்க்; லைசென்ஸ் வாங்கியாச்சு: இனி X தளத்திலும் பணப் பரிவர்த்தனை

எலான் மஸ்க்கின் 'everything app' என்ற கனவு திட்டத்தில் மேலும் ஒரு படி முன்னேற்றமாக பென்சில்வேனியாவில் X தளத்தில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
Elon Musk Tamil News: Elon Musk ready to pay taxes worth $11 billion USD

எலான் மஸ்க் தனது X தளத்தை 'everything app' என்று மாற்றக் கூடிய கனவு திட்டத்தைக் கொண்டுள்ளார். அதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டும் வருகிறார். அதாவது மெசேஜ், வாய்ஸ் மெசேஜ், வீடியோ கால், பணப் பரிவர்த்தனை என எல்லாவற்றையும் செய்யக் கூடிய வகையில் மாற்றுவதை 'everything app' என திட்டமாக கொண்டுள்ளார்.

Advertisment

அந்த வகையில் தற்போது  X தளத்தில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளார். 
பென்சில்வேனியாவில்  X தளத்தில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான உரிமம் பெறப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. 

ஃபர்ஸ்ட் போஸ்ட் அறிக்கையின்படி, X தளம் பென்சில்வேனியாவில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான உரிமத்தை வெற்றிகரமாகப் பெற்றுள்ளது. இந்தச் சாதனையானது, அமெரிக்காவில் X நிறுவனத்தால் பெறப்பட்ட 13-வது உரிமத்தைக் குறிக்கிறது.  X தளத்தை அனைத்தும் உள்ளடக்கிய  பயன்பாடாக மாற்றும் மஸ்க்கின் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று கூறியது. 

இந்த அம்சம் மூலம் X தளத்தைக் கொண்டு பயனர்கள் ஒருவருக்கொருவர் பணப் பரிவர்த்தனை செய்யலாம். கூகுள் பே, போன் பே போன்று X தளத்திலேயே பணப் பரிவர்த்தனை செய்யலாம். விரைவில் இந்த திட்டம் பல்வேறு நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ElonMusk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment