ஏ.ஐ. நாய்ஸ் ரிடக்‌ஷன், 28 மணிநேரம் பேட்டரி லைஃப்... பட்ஜெட் விலையில் Sennheiser TWS அறிமுகம்!

Sennheiser Accentum Open TWS இயர்போன்கள் இந்தியாவில் ரூ.9,990 விலையில் கருப்பு (Black), கிரீம் (Cream) ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது. அமேசான், Sennheiser நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்கலாம்.

Sennheiser Accentum Open TWS இயர்போன்கள் இந்தியாவில் ரூ.9,990 விலையில் கருப்பு (Black), கிரீம் (Cream) ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது. அமேசான், Sennheiser நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்கலாம்.

author-image
WebDesk
New Update
Sennheiser Accentum

ஏ.ஐ. நாய்ஸ் ரிடக்‌ஷன், 28 மணிநேரம் பேட்டரி லைஃப்... பட்ஜெட் விலையில் Sennheiser Accentum Open TWS அறிமுகம்!

Sennheiser நிறுவனம் அதன் புதிய உண்மையான வயர்லெஸ் (True Wireless) இயர்போன்களான Accentum Open-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இயர்போன்கள், காதின் உட்புறத்தில் இல்லாமல் வெளிப்புறத்தில் பொருத்தும் (open-ear design) வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ.9,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Sennheiser Accentum Open TWS இயர்போன்கள் இந்தியாவில் ரூ.9,990 விலையில் கருப்பு (Black) மற்றும் கிரீம் (Cream) ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது. இவற்றை அமேசான், Sennheiser நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்கலாம்.

இந்த இயர்போன்கள் 11mm டைனமிக் டிரான்ஸ்யூசர் (dynamic transducer) கொண்டுள்ளன. இதன் ஓப்பன்-இயர் டிசைன் (open-ear design), காதுகளை இறுக்கமில்லாமல் வைக்க உதவுகிறது. இதனால் நீண்ட நேரம் பயன்படுத்தும்போது ஏற்படும் அசௌகரியம் குறையும். மேலும், இசையைக் கேட்கும் அதே நேரத்தில் வெளிப்புற ஒலிகளையும் கேட்க முடியும்.

ஒவ்வொரு இயர்போனிலும் 36mAh பேட்டரி உள்ளது. இதன் மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 6.5 மணிநேரம் வரை இசையைக் கேட்கலாம். சார்ஜிங் கேஸில் 400mAh பேட்டரி உள்ளது. கேஸுடன் சேர்த்து, மொத்தமாக 28 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும். வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 1.5 மணிநேரம் வரை கேட்கும் திறன் கிடைக்கும். சார்ஜிங் கேஸ், USB Type-C போர்ட் மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

Advertisment
Advertisements

இது புளூடூத் 5.3 இணைப்பைக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் 2 சாதனங்களுடன் இணைத்துக்கொள்ளும் மல்டிபாயின்ட் கனெக்டிவிட்டி (multi-device connectivity) வசதியும் இதில் உள்ளது. தொடு கட்டுப்பாடுகள் (touch controls) மூலம் அழைப்புகள் மற்றும் பாடல்களை மாற்றிக்கொள்ளலாம். இயர்போனை காதிலிருந்து எடுத்தவுடன் தானாகவே இசையை நிறுத்தும் ஸ்மார்ட் பாஸ் (Smart Pause) வசதியும் இதில் உள்ளது. 

இந்த இயர்போன்கள் IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (splash resistance) சான்றிதழ் பெற்றுள்ளதால், வியர்வை, லேசான மழைத்துளிகளால் பாதிப்பு ஏற்படாது. அழைப்புகளின்போது, பின்னணி இரைச்சலைக் குறைக்கும் AI-அடிப்படையிலான நாய்ஸ் ரிடக்‌ஷன் வசதி உள்ளது. ஒவ்வொரு இயர்போனின் எடை 4.35g மற்றும் சார்ஜிங் கேஸின் எடை 29.3g ஆகும்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: