/tamil-ie/media/media_files/uploads/2018/06/Sennheiser-Momentum-Headset.jpg)
Sennheiser Momentum Headset review in Tamil
ஒவ்வொரு ஹெட்செட்டும் ஒவ்வொரு விதமான தேவைகளுக்கு பயன்படுத்தப்படும். ஒவ்வொருவரின் தேவையும் ஒவ்வொரு விதமாய் இருப்பதால் அவர்களுக்கு ஏற்றவாறு புதிது புதிதாக ஹெட்போன்கள் மற்றும் ஹெட்செட்கள் தயாரிப்பது வழக்கத்தில் இருக்கும் ஒன்று.
‘ஸென்ஹைசர் மொமண்ட்டம் ஃப்ரீ ஹெட்செட்’ (Sennheiser Momentum Free Headset), இசைப்பிரியர்களுக்கும், அதிக நேரம் அலைபேசியில் உரையாடுபவர்களுக்குமென உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ‘நெக்பேண்ட்’ வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஹெட்செட்டின் இரண்டு பகுதிகளிலும் பேட்டரி மற்றும் கண்ட்ரோல் பட்டன்கள் இருக்கின்றன.
மற்ற ஹெட்செட்களுடன் ஒப்பிடுகையில் மொமண்ட்டம் சற்றே வித்தியாசமாக இருக்கின்றது. மொமண்ட்டம் ஹெட்செட்களில் இருந்து வரும் ஒலியானது வெகு நெருக்கமாக நம் காதுகளுக்கு வெளியில் இருந்து வருவது போல் அல்லாமல், நம்மைச் சுற்றியிருக்கும் பகுதியில் இருந்து வரும் ஒலியை நாம் கேட்பது போன்ற மாயாஜாலத்தை உருவாக்குவது போன்று இருக்கும். நல்ல தரத்துடன் எந்த ஒரு இடையூறுமின்றி பாடல்கள் மற்றும் ஆடியோ புக்ஸ் ஆகியவற்றை இதில் கேட்கலாம்.
ஒருவருடன் அதிக நேர உரையாடலில் ஈடுபடுவதற்கும் கூட இந்த ஹெட்செட் மிகவும் சிறப்பானது. வெளியில் இருந்து வரும் தேவையற்ற ஓசைகளை முற்றிலும் தடை செய்து விட்டு, நாம் யாருடன் உரையாடுகின்றோமோ அவரின் குரலை மட்டும் கேட்க இயலும் அளவிற்கு துல்லியமாக இருக்கின்றது, இதில் இருந்து வெளிப்படும் அவுட்புட்.
இதில் இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால், காதுகளில் சரியாக பொருந்தாமல் இருப்பது தான். அதை நாம் எவ்வளவு சரியாகவும் நேர்த்தியாகவும் பொருத்த முற்பட்டாலும் அதுமட்டும் சரியாக பொருந்தவில்லை. துல்லியமான இசையையும் உரையாடலையும் அளிக்கின்ற இந்த ஸென்ஹைசரின் விலை ரூ. 14,990. விலை சற்று அதிகம் என்று யோசிப்பவர்களுக்கு ஸென்ஹைசரின் இதர மாடல்கள் இதனைவிட குறைவான விலையில் கிடைக்கும் என்பது உங்களுக்கான கூடுதல் தகவல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.