கூகுள் பே, ஃபோன்பே-வில் தவறுதலாக பணம் அனுப்பி விட்டீர்களா? இதை செய்தால் உடனே திரும்பப் பெறலாம்!

யு.பி.ஐ பேமெண்டில் தவறுகள் ஏற்படாமல் இருக்க, பணம் அனுப்புவதற்கு முன் யுபிஐ ஐடி அல்லது எண்ணைச் சரியாகச் சரிபார்ப்பதும், பெரிய தொகையை அனுப்பும் முன் சிறிய தொகையை அனுப்பி உறுதி செய்துகொள்வதும் அவசியம்.

யு.பி.ஐ பேமெண்டில் தவறுகள் ஏற்படாமல் இருக்க, பணம் அனுப்புவதற்கு முன் யுபிஐ ஐடி அல்லது எண்ணைச் சரியாகச் சரிபார்ப்பதும், பெரிய தொகையை அனுப்பும் முன் சிறிய தொகையை அனுப்பி உறுதி செய்துகொள்வதும் அவசியம்.

author-image
WebDesk
New Update
wrong UPI payment

கூகுள் பே, ஃபோன்பே-வில் தவறுதலாக பணம் அனுப்பி விட்டீர்களா? இதை செய்தால் உடனே திரும்பப் பெறலாம்!

இன்றைய காலத்தில் ரொக்கப் பணப்பரிவர்த்தனைகளை விட, யு.பி.ஐ போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் பெருமளவில் அதிகரித்து விட்டன. இருப்பினும், அவசரத்தில் அல்லது கவனக்குறைவால், தவறான நபருக்குப் பணத்தை அனுப்பிவிடும் தவறுகளும் நடக்கின்றன. அவ்வாறு நீங்கள் தவறாகப் பணத்தை அனுப்பிவிட்டால், அதை எப்படி மீட்டெடுப்பது? என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

Advertisment

1. உடனடியாக பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளுங்கள்: நீங்கள் தவறுதலாகப் பணம் அனுப்பிய நபர் உங்களுக்குத் தெரிந்தவராக இருந்தால், அவரை நேரடியாகத் தொடர்புகொண்டு பணத்தைத் திரும்ப பெறுவது எளிதான வழி. தெரியாத நபராக இருந்தால், மரியாதையாகப் பேசி, நிலைமையை விளக்கி, பணத்தைத் திரும்ப அனுப்புமாறு கோருவது முதல் மற்றும் விரைவான நடவடிக்கையாகும். இது பெரும்பாலான சமயங்களில் எளிதில் தீர்வைத் தரும்.

2. கூகுள் பே வாடிக்கையாளர் சேவையை நாடுங்கள்: பணம் பெற்றவர் பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது பணத்தைத் திரும்ப அனுப்ப மறுத்தாலோ? நீங்கள் கூகுள் பே வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம். இதற்காக, 1800-419-0157 என்ற அதிகாரப்பூர்வ எண்ணை அழைத்து உங்கள் பிரச்னையைத் தெரிவிக்கலாம். அழைப்பதற்கு முன், பின்வரும் விவரங்களை தயாராக வைத்திருப்பது அவசியம்:

பணப் பரிவர்த்தனை ஐடி (Transaction ID), பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட தேதி மற்றும் நேரம், பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை, பணம் பெற்றவரின் யு.பி.ஐ ஐடி. இந்த விவரங்களை அளிப்பதன் மூலம், வாடிக்கையாளர் சேவை மையத்தினர் உங்களுக்கு உதவ வாய்ப்புள்ளது.

Advertisment
Advertisements

3. NPCI-யில் புகார் பதிவு செய்யுங்கள்: கூகுள் பே வாடிக்கையாளர் சேவையின் மூலம் தீர்வு கிடைக்கவில்லை என்றால், நீங்கள் NPCI (National Payments Corporation of India)-ல் புகார் அளிக்கலாம். 

முதலில் npci.org.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். அதில், “What We Do” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். “Dispute Redressal Mechanism” என்ற பிரிவைத் தேர்வு செய்து, அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். சட்டப் படி, தவறுதலாக மாற்றப்பட்ட தொகையை 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உரியவரின் கணக்கிற்குத் திருப்பித் தர வேண்டும். 2 வங்கி கணக்குகளும் ஒரே வங்கியைச் சார்ந்ததாக இருந்தால், இந்த செயல்முறை இன்னும் விரைவாக முடிவடையும்.

தவறுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள்:

பணம் அனுப்புவதற்கு முன், நீங்கள் அனுப்பும் யு.பி.ஐ ஐடி அல்லது தொலைபேசி எண்ணை சரிபார்த்து உறுதி செய்யவும். முடிந்தவரை, யுபிஐ ஐடிக்கு பதிலாக கியூஆர் கோட் (QR Code) பயன்படுத்திப் பணப் பரிவர்த்தனை செய்வது பாதுகாப்பானது. புதியவர்களுக்கு பெரிய தொகையை அனுப்பும் முன், முதலில் சிறிய தொகையை அனுப்பி, அது சரியான நபருக்குச் சென்றடைந்துள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: