Sharing Facebook posts on WhatsApp : வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், மற்றும் ஃபேஸ்புக் மூன்றையும் ஒன்றாக இணைக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பினை தொடர்ந்து ஒவ்வொரு அப்டேட்டாக அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே முகநூலில் பதியப்படும் போஸ்ட்டுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் மோர் ஆப்சனை பயன்படுத்தி ஷேர் செய்ய இயலும். தற்போது சிங்கிள் டேப்பில் போஸ்ட்டுகளை வாட்ஸ்ஆப்பில் ஷேர் செய்ய இயலும்.v
Sharing Facebook posts on WhatsApp - steps
நீங்கள் உங்களின் முகநூல் பதிவுகளை ”பப்ளிக்” ஆடியன்ஸ்களுக்கு பதிவிடுகின்றீர்கள் எனில், உங்களின் முகநூல் பக்கத்தில் ”செண்ட் இன் வாட்ஸ்ஆப்” (Send in WhatsApp) என்ற ஆப்சன் தோன்றும். அதனை நீங்கள் க்ளிக் செய்தால் நேரடியாக உங்களின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக அது பதிவாகிவிடும். தங்களின் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துபவர்கள் மட்டுமே இந்த ஆப்சனை பயன்படுத்த இயலும்.
இந்த புதிய அப்டேட் ஆண்ட்ராய்டின் பேக்கேஜ் மேனேஜர் ஏ.பி.ஐ (Android PackageManager API)-ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இது தான் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப்பினை பயன்படுத்துகின்றார்களா இல்லையா என்பதை அறிய உதவும் முக்கிய ஏ.பி.ஐ. இதனால் தகவல் பரிமாற்றம் மற்றும் தனித்தகவல்கள் திருட்டு குறித்து வாடிக்கையாளர்கள் தங்களின் பயத்தினை வெளிப்படுத்தினர். ஆனால் Digit.in-ல் முகநூல் இது குறித்து அறிவிக்கையில், அது போன்ற நிகழ்வுகளுக்கு வாய்ப்பே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க : லெய்க்கா கேமராக்களுடன் மிரட்ட வருகிறது ஹூவாய் மேட் 30