சிக்னல் செயலி செயலிழப்பு.. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமா?

Signal app currently down due to technical difficulties Tamil News சீக்கிரம் சேவையை மீட்டெடுக்கக் கடுமையாக உழைத்து வருகிறது” என்று கூறுகிறது.

Signal app currently down due to technical difficulties Tamil News
Signal app currently down due to technical difficulties Tamil News

Signal app currently down due to technical difficulties Tamil News : தனியுரிமை மையப்படுத்தப்பட்ட உடனடி செய்தி பயன்பாட்டு சிக்னலை அணுகுவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், அது உங்களுக்கு மட்டுமில்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல பயனர்களுக்கு சிக்னல் செயலி செயலிழந்துள்ளது.

மறைகுறியாக்கப்பட்ட இந்த மெசேஜிங் செயலி “தொழில்நுட்ப சிக்கல்களை அனுபவிக்கிறது” மற்றும் பல்வேறு பயனர்கள் பயன்பாட்டின் பிழை செய்தியை (in-app error) பெறுகின்றனர். நிறுவனம் “சீக்கிரம் சேவையை மீட்டெடுக்கக் கடுமையாக உழைத்து வருகிறது” என்று கூறுகிறது.

நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ கணக்கில் ஒரு ட்வீட் மூலம் இந்த சிக்கலை “ஹோஸ்டிங் செயலிழப்பு” காரணமாகக் கூறியதுடன், விரைவில் சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியது. அந்த ட்வீட்டில், “பொறுமையாக இருங்கள், மக்களே! சிக்னல் தற்போது செயலிழந்துள்ளது. ஹோஸ்டிங் செயலிழப்பு எங்கள் சேவையின் பகுதிகளை பாதிக்கும். நாங்கள் அதை மீண்டும் கொண்டு வருவதற்கு வேலை செய்கிறோம்” என்று கூறப்பட்டிருந்தது.

சிக்னல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளாவிய செயலிழப்பை எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிக்னல் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்கிடமிருந்து ஒப்புதலைப் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Signal app currently down due to technical difficulties tamil news

Next Story
இனி ட்விட்டரில் HD வீடியோ! அசத்தலான அப்டேட்ஸ்!Twitter is making changes to offer improved video quality Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com