சிக்னல் அப்டேட்ஸ் : வீடியோ க்ரூப் அழைப்பு வரம்பில் மாற்றம்!
Signal increases its video group call limit to 40 participants Tamil News புதிதாக உருவாக்கப்பட்ட SFU, கடந்த 9 மாதங்களாக செயல்பாட்டில் உள்ளது. இப்போது 40 பங்கேற்பாளர்களை ஆதரிக்கும் வகையில் அளவிடப்பட்டுள்ளது.
Signal increases its video group call limit to 40 participants Tamil News : பாதுகாப்பான செய்தியிடல் செயலியான சிக்னல் அதன் வீடியோ க்ரூப் அழைப்பு வரம்பை 40 உறுப்பினர்களாக உயர்த்தியுள்ளது. இந்த ஆப், அதன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட க்ரூப் அழைப்பு அம்சத்தை ஒரு வருடத்திற்கு முன்பு வெளியிட்டது. அப்போது, 5 பங்கேற்பாளர்களை மட்டுமே இந்த செயலி ஆதரித்தது.
Advertisment
ஒரு வலைப்பதிவு போஸ்ட்டில், இந்த அம்சத்திற்கு சில புதிய பொறியியல் தேவை என்று சிக்னல் விவரித்தது. "அனைத்து தகவல்தொடர்புகளும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யும் அதே வேளையில், அந்த அளவிலான அழைப்புகளை ஆதரிக்கும் ஷெல்ஃப் மென்பொருள் எதுவும் இல்லை. எனவே வேலையைச் செய்ய எங்கள் சொந்த திறந்த மூல சிக்னல் அழைப்பு சேவையை நாங்கள் உருவாக்கினோம்" என்று நிறுவனம் மேலும் கூறுகிறது.
பொதுவாக, வீடியோ மற்றும் ஆடியோ பரிமாற்றத்தை அனுமதிக்கும் 3 கட்டமைப்புகள் உள்ளன. அவை, முழு மெஷ், சர்வர் மிக்ஸிங் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகிர்தல். முழு மெஷ் சிறிய அழைப்புகளுடன் மட்டுமே வேலை செய்யும், அதே சமயம் சர்வர் மிக்ஸிங், அதிக பங்கேற்பாளர்களை ஆதரித்தாலும், எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படவில்லை.
எனவே, தங்கள் சொந்த open-source SFU (செலக்டிவ் ஃபார்வர்டிங் யூனிட்)-ஐப் பயன்படுத்தி, நிறுவனம் மீடியா ஓட்டத்தைப் பாதுகாப்பாக உறுதி செய்ய முடிந்தது. ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்கள் மீடியாவை ஒரு சேவையகத்திற்கு அனுப்புகிறார்கள். பின்னர், சேவையகம் மீடியாவைப் பார்க்காமல் அல்லது மாற்றாமல் பெறுநர்களுக்கு "forwards" அனுப்புகிறது. "இது பல பங்கேற்பாளர்களுடன் வேலை செய்கிறது. மேலும், இறுதி முதல் இறுதி குறியாக்கத்துடன் இணக்கமானது" என்று அந்த போஸ்ட் கூறுகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட SFU, கடந்த 9 மாதங்களாக செயல்பாட்டில் உள்ளது. இப்போது 40 பங்கேற்பாளர்களை ஆதரிக்கும் வகையில் அளவிடப்பட்டுள்ளது.
மறுபுறம், அதன் போட்டியாளரான வாட்ஸ்அப், 2018 முதல் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட க்ரூப் வீடியோ அழைப்புகளை வழங்குகிறது. இருப்பினும், ஒரே நேரத்தில் எட்டு பங்கேற்பாளர்களை மட்டுமே அதில் கையாள முடியும். சிக்னலின் புதிய SFU கட்டமைப்புடன், வாட்ஸ்அப் விரைவில் அதன் அழைப்பு வரம்பை சரியான நேரத்தில் அதிகரிக்கக்கூடும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil