Advertisment

செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள்? 4.45 பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல்லில் கண்டறிந்து என்ன?

செவ்வாய் கிரகத்தில் விழுந்த விண்கல் NWA7034-ன் ஒரு பகுதியை ஆய்வு செய்ததில் பண்டைய காலங்களில் செவ்வாய் கிரகத்தில் சூடான நீர் ஓடியதைக் குறிக்கிறது.

author-image
WebDesk
New Update
mars

செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. சமீபத்திய சான்றுகள் செவ்வாய் கிரகத்தில்  பண்டைய காலத்தில் சூடான நீர் ஓடியதற்கான ஆதாராத்தை காட்டுகின்றன.

Advertisment

இப்போது அங்கு வறண்ட நிலைமைகள் இருந்தபோதிலும், சிவப்பு கிரகம் பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருந்ததை காட்டுகிறது.  

இந்த சமீபத்திய தகவல் 2011-ல் சகாரா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டNWA7034  என்ற செவ்வாய் கிரக விண்கல் மூலம் தெரியவந்தது. 4.45 பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல் இதை கூறுகிறது. 

இரண்டு பில்லியன் ஆண்டுகள் பழமையான செவ்வாய் விண்கல், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பழமையான விண்கல் ஆகும். அதன் பளபளப்பான கருப்பு தோற்றம் காரணமாக "அழகு கருப்பு" என்று அழைக்கப்படுகிறது. அந்த விண்கல்லில் நீர் நிறைந்த திரவங்களின் கைரேகைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பூமியில் வாழ்வின் வளர்ச்சிக்கு நீர்வெப்ப அமைப்புகள் அவசியம் என்றும், அவர்களின் கண்டுபிடிப்புகள் செவ்வாய் கிரகத்திலும் தண்ணீர் இருப்பதாகக் கூறுகின்றன - ஆரம்பகால மேலோடு உருவாகும் போது வாழக்கூடிய சூழல்களுக்கு ஒரு முக்கிய மூலப்பொருள் என்று விஞ்ஞானிகள் விளக்கினர்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு பற்றி கூறுவது இது முதல் முறை அல்ல. ஜூலை மாதம், எம்.ஐ.டியைச் சேர்ந்த புவியியலாளர்கள் இதை ஆய்வு செய்து கூறினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment