லேப்டாப் ஸ்லோவாக உள்ளதா? இப்பவே இதை செய்து பாருங்க!

லேப்டாப் மெதுவாக செயல்படுகிறது என பலரும் இந்த பிரச்சனைகளை சந்தித்து இருப்போம். சில எளிய வழிகளை பின்பற்றி லேப்டாப் செயல்படும் வேகத்தை அதிகரிக்கலாம்.

லேப்டாப் ஸ்லோவாக உள்ளதா? இப்பவே இதை செய்து பாருங்க!

முன்பு ஒரு வீட்டில் லேப்டாப் இருந்தால், அது பெரிதாக பார்க்கப்படும். பலரும் அதுபற்றி பேசுவர். ஆனால் இன்று வீட்டுக்கு வீடு லேப்டாப் உள்ளது. லேப்டாப் பயன்பாடும் அதிகரித்து விட்டது. கொரோனாவிற்கு பிறகு லேப்டாப், செல்போன் பயன்பாடு மேலும் அதிகரித்தது. வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று வந்தவுடன் பலரும் லேப்டாப்யுடனே வலம் வருகின்றனர்.

அந்தவகையில் முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கையில் லேப்டாப், கணினி மெதுவாக செயல்பட்டால் எரிச்சல் அடைய செய்யும். அந்த வேலையை மீண்டும் செய்து முடிக்க கூடுதல் அதிக நேரம் எடுக்கும். இந்த பிரச்சனையை தீர்க்க சில எளிய வழிகள் உள்ளன. அது பற்றி பார்க்கலாம். லேப்டாப், கணினி ஸ்லோவாக இருக்கிறது என்றால் அதிக அளவு சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் ரன்னாகின்றன என்று அர்த்தம்.

தேவையற்ற பிரவுசர் டாப்கள்

நீங்கள் கூகுள், கிரோமில் பல பிரவுசர் டாப்களை ஓபன் செய்து பயன்படுத்துவீர்கள். அந்த டாப்பிலிருந்து தகவலை எடுத்து பயன்படுத்தி விட்டு அப்படியே விட்டுவீர்கள். இது உங்கள் லேப்டாப் செயல்படும் வேகத்தை குறைக்கும். ரேம் செயல்படும் வேகத்தை குறைக்கலாம். ஆகையால், தேவையற்ற பிரவுசர் டாப்களை மூடி வேண்டும். விண்டோ கிளாஸ் செய்ய வேண்டும்.
Background,Foreground ப்ரோகிராம் செயல்பாடுகளும் லேப்டாப் செயல்படும் வேகத்தை குறைக்கும்.

ரீஸ்டார்ட் செய்து பயன்படுத்துங்கள்

லேப்டாப் ஸ்லோவாக இருக்கும்போது ரீஸ்டார்ட் செய்து பயன்படுத்துங்கள். இது லேப்டாப் மீண்டும் வேகமாக செயல்பட உதவும். ரீஸ்டார்ட் செய்கையில், தற்காலிக கேச் மெமரி நீங்குகிறது. இது லேப்டாப் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. தொடர்ந்து இதே பிரச்சனை எதிர்கொண்டு வந்தால் லேப்டாப் சர்வீஸ் கொடுத்து பாருங்கள். உங்களது டேட்டாவை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். ஸ்டார்ட்அப் பயன்பாடுகளிலும் கவனம் செலுத்தி தேவையில்லா ப்ரோகிராம்களை நீக்கி விடுங்கள்.

தேவையில்லாத அப்பிளிகேஷன்களை நீக்கி விடுங்கள்

உங்கள் கணினி, லேப்டாப்பில் உள்ள தேவையில்லாத டேட்டா, போட்டோ, அப்பிளிகேஷன்களை நீக்கி விடுங்கள். இது உங்களது லேப்டாப் வேகத்தை அதிகரிக்க உதவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் லேப்டாப் ஸ்டோரேஷ், ரேம் மெமரியை மேம்படுத்தும். தேவையில்லாத ப்ரோகிராம் செயல்பாடுகளை தடுக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Simple tips to enhance laptop processing speed