அமேசான் அலெக்ஸா டிவைஸ்ஸில் இருந்து ஸ்கைப் கால் செய்வது எப்படி ?

முதல் 100 நிமிட வீடியோ கால்கள் இலவசமாக பேசிக் கொள்ளும் சலுகையினை அறிமுகம் செய்துள்ளது அமேசான்.

Skype calls from Amazon Alexa : வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நம் சொந்தங்களை ஒரே அழைப்பில் பார்த்து பேசும் வசதிகளை உருவாக்கிக் கொடுத்தது தான் ஸ்கைப் காலாகும். இந்த வீடியோ கால் ஆப்கள் வந்த பின்பு நாம் நம் உறவினர்களை விட்டு வெகு தொலைவில் தள்ளி இல்லை என்பதை உணரத் தொடங்கினோம்.

ஹோம் ஆட்டோமேசன் டிவைஸ்கள் வீட்டில் இருக்கும் நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க உதவியாக இருந்தது. இது போன்ற டிவைஸ்களை அதிக அளவில் வெளியிட்டு மக்கள் மனதில் நிலைத்த இடதினை பிடித்தது அமேசான் ஆட்டோமேசன் டிவைஸ்கள். தற்போது இந்த டிவைஸ்களில் மூலமாக ஸ்கைப் செயலியை பயன்படுத்தி வீடியோ கால் செய்து கொள்ளலாம்.  இது தொடர்பான செய்தியை  ஆங்கிலத்தில் படிக்க

Skype calls from Amazon Alexa : அலெக்சா டிவைஸ்களில் ஸ்கைப் கால்கள்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது ஸ்கைப் கால் வசதியினை அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் அனைத்திருகும் உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம் அமேசான் எக்கோ டாட், எக்கோ, எக்கோ ப்ளஸ் போன்ற டிவைஸ்களில் ஆடியோ கால்களையும், அமேசான் எக்கோ ஷாட் மற்றும் எக்கோ ஸ்பாட் போன்ற டிவைஸ்களில் வீடியோ மற்றும் ஆடியோ கால்கள் என இரண்டு வசதிகளையும் தற்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

அமெரிக்கா, இந்தியா, கனடா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இந்த வசதிகள் அறிமுகமாக உள்ளது. இது தொடர்பான முதல் அறிவிப்பினை செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால் தற்போது தான் நடைமுறைக்கு வந்துள்ளது.

Skype calls from Amazon Alexa

Skype calls from Amazon Alexa : வீடியோ கால்கள் செய்வது எப்படி ?

  • உங்களின் ஆண்ட்ராய்ட் அல்லது ஐபோனில் இருக்கும் அமேசான் அலெக்சா ஆப்பில் லாக் இன் செய்ய வேண்டும்.
  • இடது பக்க மூலையில் இருக்கும் ஹாம்பர்கர் ஆப்சனில் இருக்கும் செட்டிங்க்ஸ் பக்கத்திற்கு செல்ல வேண்டும்
  • அதில் அலெக்சா ப்ரெஃப்ரென்ஸிற்கு கீழே இருக்கும் கம்யூனிகேசனை தேர்வு செய்ய வேண்டும்
  • கம்யூனிகேசனிற்கு கீழே ஸ்கைப் ஆப்சன் உள்ளது
  • அதில் உங்களின் மைக்ரோசாஃப்ட் அக்கௌண்ட் கிரெடென்சியலை பதிவு செய்து லாக் இன் செய்து கொள்லலாம்

சிறப்பு சலுகைகள்

ஒவ்வொரு மாதமும் முதல் 100 நிமிட வீடியொ கால்கள் இலவசமாக பேசிக் கொள்ளும் சலுகையினை அறிமுகம் செய்து உள்ளது அமேசான் நிறுவனம். இதன் வேலிடிட்டி இரண்டு மாதங்களுக்கு மட்டுமே.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close