இன்டர்நெட்டின் வேகம் மெதுவாக உள்ளதால் சிரமப்படுகிறீர்களா?.. இதோ உங்களுக்கான தீர்வு

உங்களுடைய பிராட் பேண்டின் இணைய வேகத்தின் நிலையை சரிப்பார்க்க SpeedTest க்கான ஆப்பை உங்களுடைய ஆண்ட்ராய்ட் மற்றும் iPhone ல் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.

By: Updated: March 25, 2020, 12:09:53 PM

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். இதன் காரணமாக இணையதளத்தை குறிப்பாக வீடுகளில் உள்ள பிராட் பேண்ட் மற்றும் Wi-Fi ஐ சார்ந்து இருக்க வேண்டியது அதிகரித்துள்ளது. அனைவரும் வீட்டில் உட்கார்ந்து இணையத்தை வேலை பார்க்க, திரைபடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை streaming செய்வதற்கு, விளையாடுவதற்கு மற்றும் இன்ன பிற விஷயங்களுக்காக பயன்படுத்தும் போது உங்கள் இணையத்தின் வேகம் கடந்த சில வாரங்களை விட கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

எனவே அதன் வேகத்தை கூட்ட என்ன செய்ய வேண்டும். மக்களால் இணையத்தை பயன்படுத்தாமல் இருக்க முடியாது ஏனென்றால் தற்போது அவர்களுக்கு உள்ள ஒரே பொழுது போக்கு இணையம் தான்.

இணையத்தின் வேகத்தை எவ்வாறு சரிபார்ப்பது ?

உங்களுடைய பிராட் பேண்டின் இணைய வேகத்தின் நிலையை சரிப்பார்க்க SpeedTest க்கான ஆப்பை உங்களுடைய ஆண்ட்ராய்ட் மற்றும் iPhone ல் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். அல்லது Speedtest க்கான இணையதள முகவரிக்கு உங்கள் கணிணி வாயிலாக செல்லலாம். இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்த பிறகு அதை திறந்து, கைபேசி திரையின் நடுவில் தெரியும் “Go” என்பதை சொடுக்கவும். இந்த ஆப் சோதிக்க சில நிமிடங்களை எடுத்துக் கொள்ளும் அதன் பிறகு உங்கள் பிராட் பேண்ட் இணைப்பின் இணைய வேகத்தின் முடிவைக் காண்பிக்கும்.

மெதுவான இணைய வேகத்தை எவ்வாறு சரிசெய்வது ?

எளிதான மற்றும் மிக பொதுவான வழி என்பது router ஐ reboot செய்வது. இது பெரும்பாலும் பல செயல்பாட்டு சிக்கல்களை (operational issues) சரிசெய்ய உதவும். Router ஐ reboot செய்த பிறகும் வேகம் மீண்டும் பழைய நிலையை அடையவில்லை என்றால் திரைப்படங்களை streaming செய்வது, விளையாடுவது மற்றும் இதர பொழுதுபோக்கு விஷயங்களை குறைத்து வேலைக்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும்.
இணைய வேகத்தை அதிகரிப்பதற்கான மற்றொரு வழி நேரத்தை திட்டமிடல். எடுத்துக்காட்டாக காலை முதல் மாலை வரை உள்ள பொழுதில் வேலை மட்டும் செய்யுங்கள், மாலை 6 மணிக்கு பிறகு விளையாடுவதற்கும் இரவு 9 மணிக்கு பிறகு திரைப்படங்களை streaming செய்வதற்கும் பயன்படுத்துங்கள். ஒரு நேரத்தில் ஒரு நோக்கத்திற்கு மட்டும் இணையத்தை பயன்படுத்தினால் இணைய வேக பிர்ச்சனையை இது தீர்க்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Slow internet connection internet connection slow slow wifi connection how to check slow internet speed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X