கரண்ட் பில் இனி பாதியாக குறையும்.. ரூ.3,000 பட்ஜெட்டில் பவர்ஃபுல் BLDC ஃபேன்கள்!

குறைந்த மின்பயன்பாடு, அதிக செயல்திறன், நீண்டஆயுள் ஆகிய காரணங்களுக்காக அதிகம் விரும்பப்படும் ஃபேன்களாக BLDC மாறியுள்ளது. ரூ.3,000 பட்ஜெட்டில் கிடைக்கும் 5 சிறந்த BLDC ஃபேன்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

குறைந்த மின்பயன்பாடு, அதிக செயல்திறன், நீண்டஆயுள் ஆகிய காரணங்களுக்காக அதிகம் விரும்பப்படும் ஃபேன்களாக BLDC மாறியுள்ளது. ரூ.3,000 பட்ஜெட்டில் கிடைக்கும் 5 சிறந்த BLDC ஃபேன்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
BLDC Fans

கரண்ட் பில் இனி பாதியாக குறையும்.. ரூ.3,000 பட்ஜெட்டில் பவர்ஃபுல் BLDC ஃபேன்கள்!

உங்கள் வீட்டின் மின்சார கட்டணத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? வீட்டில் உள்ள சீலிங் ஃபேனை மாற்றுவதன் மூலம் மின் கட்டணத்தை குறைக்கலாம். ஆம்!  இத்தனை ஆண்டுகளாக வழக்கமான ஃபேன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது மக்கள் BLDC ஃபேன்களைத் தேடி வருகின்றனர். குறைந்த மின் பயன்பாடு, அதிக செயல்திறன், நீண்ட ஆயுள் ஆகிய காரணங்களுக்காக அதிகம் விரும்பப்படும் ஃபேன்களாக மாறியிருக்கிறது.

Advertisment

BLDC ஃபேன் என்றால் என்ன?

BLDC என்றால் Brushless Direct Current Fan. இதன் முக்கிய அம்சம், வழக்கமான ஃபேன்களில் உள்ள பிரஷ் மோட்டார்கள் இல்லாமல், நேரடியாக DC மோட்டார் மூலம் இயங்குகிறது. இதனால் மின்சாரம் மிகவும் குறைவாகவே செலவாகிறது. வழக்கமான ஏசி மற்றும்  ஃபேன்கள் 50 முதல் 100 வாட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் நிலையில், BLDC ஃபான்கள் வெறும் 24 முதல் 35 வாட் மட்டுமே பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.

முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

Advertisment
Advertisements

ஒரு யூனிட் மின்சாரத்தில், வழக்கமான ஃபேன் 6.5 முதல் 10 மணி நேரம் மட்டுமே இயங்கும். ஆனால் BLDC ஃபேன் 25 முதல் 28 மணி நேரம் இயங்கும். இதனால் 3 மடங்கு மின்சாரம் மிச்சமாகும். இந்த ஃபேன்கள் மிகவும் அமைதியானது. இந்த ஃபேனில் சுமார் 32 டெசிபெல் மட்டுமே சத்தம் வரும் என்று கூறப்படுகிறது.  வழக்கமான ஃபேன்களில் அதன் மோட்டாரில் உள்ள பிரஷ் காரணமாக சத்தம் அதிகம் இருக்கும். மின்தடை ஏற்படும் நேரத்தில் BLDC ஃபேன்கள் சிறந்த தீர்வாக இருக்கின்றன. குறைந்த மின்சாரம் பயன்படுத்துவதால் இன்வெர்டர் மூலம் நீண்ட நேரம் இயங்கும். சில BLDC ஃபேன்களில் முந்தைய ஸ்பீடை நினைவில் வைத்து அதனை மீண்டும் இயக்கும் போது அதே ஸ்பீடில் இயங்கும். அதே போல அதன் லைட்டில் உள்ள வண்ணங்களும் மீண்டும் இயக்கும்போது, அதே நிலைக்கு மாறி இயங்க ஆரம்பிக்கும்.

வழக்கமான ஃபேன் - BLDC வித்தியாசம்?

பழைய ஃபேன்களில் 50 முதல் 100 வாட் மின்சாரம் செலவாகும். ஆனால் இந்த BLDC ஃபேனில் 28 முதல் 35 வாட் மின்சாரம் மட்டுமே செலவாகும். மேலும் பழைய ஃபேன்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 முதல் 6 ஆண்டுகள் இருக்கும். ஆனால் இந்த BLDC ஃபேனில் 7 முதல் 10 ஆண்டுகள் இருக்கும். வழக்கமான ஃபேன்களில் சத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த BLDC ஃபேனில் 32 டெசிபல் அளவு மட்டுமே இருக்கும். பழைய ஃபேன் போல் அல்லாமல் இது இன்வெர்டர் ஃபிரெண்ட்லியாக செயல்படும். விலையும் பெரிய வித்தியாசம் இருக்காது. பழைய ஃபேன்கள் ரூ. 1200 முதல் ரூ. 1800 வரை விற்கப்பட்டால் இந்த BLDC ஃபேன் ரூ.3000 முதல் ரூ.7000 வரை விற்கப்படுகிறது.

5 சிறந்த BLDC சீலிங் ஃபேன்கள்:
1. Atomberg Renesa Encel Smart Fan [ரூ.3,299]: 
 atomberg Renesa Smart

அமேசானில் ரூ.3,299-க்கு கிடைக்கிறது. 3 ஆண்டு உத்தரவாதத்துடன் உங்கள் அறைக்கு ஏற்றவாறு பல்வேறு வண்ணங்களிலும், நேர்த்தியான வடிவமைப்புகளிலும் கிடைக்கிறது. குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், இன்வெர்ட்டரில் நீண்ட நேரம் இயங்கும். சாதாரண மின்விசிறிகளை விட குறைவான சத்தத்தில் இயங்கும் திறன் கொண்டது.  வேகத்தைக் கட்டுப்படுத்தவும், டைமர் அமைக்கவும், பூஸ்ட் மோட் (Boost Mode) மற்றும் ஸ்லீப் மோட் (Sleep Mode) போன்றவற்றை இயக்கவும் எளிதான ரிமோட் கண்ட்ரோல் வசதியும் உள்ளது

2. Orient Electric Apex-FX [ரூ.1,499]:

Orient Electric Apex-FX

மலிவான ஆற்றல் திறன் கொண்ட மின் விசிறியை விரும்பினால், ஓரியண்டின் இந்த மாடல் சிறந்ததாக இருக்கலாம். பிளிப்கார்ட், அமேசான் இரண்டிலும் ரூ.1,499-க்கும் குறைவான விலையில் வாங்கலாம். பல வண்ண விருப்பங்கள் மற்றும் சக்திவாய்ந்த மோட்டார்களைக் கொண்டு உள்ளது. 1200 மிமீ (48 இன்ச்) பிளேடுடன் கூடிய கிளாசிக் வடிவமைப்பில் வருகிறது. இது நடுத்தர அளவுள்ள அறைகளுக்கு ஏற்றது. நிமிடத்திற்கு 350 முதல் 370 சுழற்சிகள் (RPM) வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. இதன் காற்று விநியோகம் (Air Delivery) சுமார் 210 CMM (Cubic Meters per Minute) ஆக இருக்கும், இது அறை முழுவதும் நல்ல காற்றோட்டத்தை வழங்கும். இதன் மின் நுகர்வு பொதுவாக 50 வாட்ஸ் முதல் 78 வாட்ஸ் வரை இருக்கும் (மாடலைப் பொறுத்து மாறுபடலாம்).

3. Havells FAB BLDC Ceiling fan [ரூ.2,999]:

 Havells FAB BLDC Ceiling

அமேசானில் இந்த சிறந்த ஸ்மார்ட் விசிறியை ரூ.2,999 விலையில் வாங்கலாம். இது குறைந்த மின்சாரத்தில் இயங்குவதோடு, சாதாரண மின்விசிறிகளுடன் ஒப்பிடும்போது சுமார் 60% முதல் 65% வரை மின்சாரத்தை சேமிக்க உதவுகிறது. அதிகபட்ச வேகத்தில் இயங்கும் போது 30 முதல் 35 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. இது உங்கள் மின்சாரக் கட்டணத்தைக் கணிசமாகக் குறைக்கும். வேகத்தைக் கட்டுப்படுத்தவும், டைமர் அமைக்கவும், மேலும் சில பிரத்யேக முறைகளை (Modes) இயக்கவும் ரிமோட் கண்ட்ரோல் வசதி உள்ளது. சில மாடல்களில் ரிவர்ஸ் ரொட்டேஷன் வசதி உள்ளது. இது குளிர்காலத்தில் அறையில் உள்ள சூடான காற்றை கீழ்நோக்கி தள்ளுவதன் மூலம் அறையை கதகதப்பாக வைத்திருக்க உதவும்.

4. V-Guard ZenAir BLDC [ரூ.2,999]:

V-Guard ZenAir BLDC

மின்விசிறி பிரஷ் இல்லாத டைரக்ட் கரண்ட் (BLDC) மோட்டார் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது குறைந்த மின்சாரத்தில் இயங்குவதோடு, சாதாரண மின்விசிறிகளுடன் ஒப்பிடும்போது சுமார் 60% முதல் 65% வரை மின்சாரத்தை சேமிக்க உதவுகிறது. அதிகபட்ச வேகத்தில் இயங்கும் போது 30 முதல் 35 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. இது உங்கள் மின்சாரக் கட்டணத்தைக் கணிசமாகக் குறைக்கும்.  BLDC மோட்டார் இருப்பதால், இந்த மின்விசிறிகள் பொதுவாக குறைந்த சத்தத்துடன் இயங்கும். அதிகபட்ச வேகத்தில் இயங்கி விரைவான காற்றோட்டத்தை வழங்கும். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வேகத்தைக் குறைத்து, இரவில் தூக்கத்தை உறுதி செய்யும். இயற்கையான கடல் காற்று வீசுவதைப் போன்ற உணர்வை அளிக்க வேகத்தை மாற்றியமைக்கும். இதன் விலை ரூ.2,999 மட்டுமே.

5. Colorbot Stella Quad 4 Blade Fan [ரூ .3,849]:

Colorbot Stella Quad 4 Blade Fan

"கலர்போட் ஸ்டெல்லா 4 பிளேட் ஃபேன்" (Colorbot Stella Quad 4 Blade Fan) என்பது ஒரு நவீன BLDC தொழில்நுட்பம் கொண்ட சீலிங் ஃபேன் ஆகும். இந்த மின்விசிறி 4 ஏரோடைனமிக் பிளேடுகளுடன் வருகிறது. இது சீரான மற்றும் அதிக காற்று விநியோகத்தை வழங்குவதோடு, ஃபேன் இயங்கும் போது ஏற்படும் சத்தத்தையும் குறைக்க உதவுகிறது. இது சாதாரண மின்விசிறிகளுடன் ஒப்பிடும்போது கணிசமாக குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்துகிறது (பொதுவாக 30W அதிகபட்ச வேகத்தில்). வேகத்தை சரிசெய்யவும், டைமர் அமைக்கவும், மேலும் சில சிறப்பு மோடுகளை (Modes) இயக்கவும் ரிமோட் கண்ட்ரோல் வசதி உள்ளது. ரூ.3,849 விலையில், இது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இரண்டிலும் கிடைக்கிறது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: